பக்கம் எண் :
தொடக்கம்
398தொல்காப்பியம் - உரைவளம்

உரிபொருள்களோடும்     விரவுதற்கும்,  புறனடைச்  சூத்திரங்கள்  தனித்தனியே  கூறி  வைத்தாராதலால்,
ஈண்டு  மீண்டும்  முன் கூறிய  முதலொடு கருப்பொருள் விரவுதலையே  கூறினாரென்பது  கூறலாமாதலின்
அது   பொருந்தாதென்க.   ஐந்திணையிலடங்காப்    பிற    உரிப்பொருட்டுறைகள்   இவ்வியலில்  மேற்
சுட்டினமட்டோடமையாது   வேறு   வருவனவுமுளவாதலின்  அவற்றையமைக்க   இப்புற  நடை  ஈண்டுக்
கூறப்பட்டது.
 

தலைமக்களின்   மனையற  மாட்சியைச் செவிலி  வியந்து பாராட்டல், கற்பறக்காதலால் இற்சிறப்பின்பம்
தலைவன்  பாராட்டல்,   தலைவன்  வரவு  கூறுவாரைத்  தோழி வாழ்த்தல், அவரைத் தலைவி வாழ்த்தல்,
இயற்பட  மொழிதல்,   பரத்தை  தலைவி  பாங்காயினார்   கேட்பக்  கூறல் போல்பவையும் பிறவும் முன்
கூறியவற்று  ளடங்காமையின், அவையமைய இப்புறனடைச் சூத்திரமின்றியமையாமை யறிக.
 

“பிரசங் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரிகதிர்ப் பொற்கலத் தொருகை யேந்திப்
 
புடைப்பிற் சுற்றும் பூந்தலைச் சிறுகோ
லுண்ணென் றோக்குபு புடைப்பத் தெண்ணீர்
முத்தரிப் பொற்சிலம் பொலிப்பத் தத்துற்
றரிநரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரீஇ மெலிந் தொழியப் பந்த ரோடி
ஏவன் மறுக்குஞ் சிறுவிளை யாட்டி
அறிவு மொழுக்கமும் யாண்டுணர்ந் தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடிவற னுற்றெனக்
கொடுத்த தந்தை கொழுஞ்சோ றுள்ளாள்;
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுது மறுத் துண்ணுஞ் சிறுமது கையளே.”

(நற்-110)
 

தலைவன் இற்சிறப்பின்பம் பாராட்டற்குச் செய்யுள்:
   

“விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும்
அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும்
இரண்டுந் தூக்கில் சீர்சா லாவே,
பூப்போ லுண்கண் பொன்போல் மேனி

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்