பொருந்தாது. அன்றியும் முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் ஆகிய செய்யுட்குரிய பொருள்கள் யாவுமே மயங்கும் எனின் புலனெறி வழக்கத்துக்கு ஓர் வரையறையில்லை என்றாகி விடும். |
49. | உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத் தள்ளாதாகும் திணையுணர் வகையே | (49) |
|
ஆ.மொ.இல. |
‘Ullurai Uvamam’ and ‘Enai Uvamam’ will not fail to make clear understanding of ‘Thinai’ (aspects of love) |
பி.இ.நூ. |
நம்பி 237. இல.வி.அ.213 |
உள்ளுறை யுவமம் வெளிப்படை உவமம் என எள்ளரும் உவமம் இருவகை யுடைத்தே. |
இளம்பூரணர் |
49. உள்ளுறை உவமம்.................வகையே. |
இஃது உவம வகையான் ஐந்திணைக்கும் உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) உள்ளுறை உவமம் ஏனை உவமம் என உள்ளுறைக் கண் வரும் உவமும் ஒழிந்த உவமமும் என இருவகையாலும், திணை உணர்வகை தள்ளாது ஆகும். திணை உணரும் வகை தப்பாதாகும் (ஏகாரம் ஈற்றசை) |
உதாரணம் முன்னர்க் காட்டுதும். |
நச்சினார்க்கினியர் |
49. உள்ளுறை..............வகையே |
இஃது உவமவியலுள் அகத்திணைக் கைகோள் இரண்டிற்கும்’1பொதுவகையான் உரியதொன்று கூறுகின்றது. |
1 களவு, கற்பு |