(இ-ள்) முதல் எனப்படுவது நிலம் பொழுது இரண்டின் இயல்பு - முதல் என்று சொல்லப்படுவது நிலமும் காலமும் ஆகிய அவ்விரண்டினது இயற்கை, என மொழிப இயல்பு உணர்ந்தோர் - என்று சொல்லுவர் உலகின் இயல்பு உணர்ந்தோர், |
இயற்கை என்பதனால் செய்து கோடல் பெறாமை அறிந்து கொள்க. நிலம் என்பதனால் பொருள் தோற்றுதற்கு இடமாகிய ஐம்பெரும் பூதமும் கொள்க. |
நச்சினார்க்கினியர் |
4. முதலெனப் ..................................... தோரே. |
இது நிறுத்த முறையானே1 முதல் உணர்த்துவான் அதன் பகுதியும் அவற்றுட் சிறப்புடையனவும் இல்லனவுங் கூறுகின்றது. |
இதன் பொருள்:- முதல் எனப்படுவது - முதலென்று சிறப்பித்துக் கூறப்படுவது, நிலம் பொழுது இரண்டின் இயல்பு என மொழிப - நிலனும் பொழுதும் என்னும் இரண்டினது இயற்கை நிலனும் இயற்கைப் பொழுதுமென்று கூறுப, இயல்பு உணர்ந்தோரே - இடமுங் காலமும் இயல்பாக உணர்ந்த ஆசிரியர் என்றவாறு. |
இயற்கையெனவே செயற்கை நிலனுஞ் செயற்கைப் பொழுதும் உளவாயிற்று. மேற் ‘பாத்திய’ (2) நான்கு நிலனும் பொழுதும் முன்னர் அறியப்படும்.2 முதல் இயற்கைய வென்ற தனாற் கருப்பொருளும் உரிப்பொருளும் இயற்கையுஞ் செயற் |
1. முன் சூத்திரத்து முதல் கரு உரிப் பொருள் என வரிசைப் படுத்திய முறை. 2. சூ. 12-15. |