பக்கம் எண் :
தொடக்கம்
ஏறிய மடல்நிறம் இளமைதீர் திறம் சூ.54427

இதனுள் தலைமகன் இளமை தீர்திறம் வந்தவாறு காண்க.
 

“அரும்பிற்கு முண்டோ அலரது நாற்றம்
பெருந்தோள் விறலி பிணங்கல் - சுரும்போடு
அதிரும் புனலூரற்கு ஆரமிழ்தம் அன்றோ
முதிரும் முலையார் முயக்கு.”
2

(புறப்-இருபாற்பெருந்திணை-19)
 

இதனுள் தலைமகன் இளமை தீர் திறம் வந்தவாறு காண்க.
 

“ஆண்டலைக் கீன்ற பறழ்மகனே நீயெம்மை
வேண்டுவல் என்று விலக்கினை நின்போல்வார்
தீண்டப் பெறுபவோ மற்று.”

(கலி-மருதம்-29)
 

எனவும்,
 

“உக்கத்து மேலும் நடுஉயர்ந்து வாள்வாய
கொக்குரித்தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்ககலம் புல்லினெஞ்சூன்றும் புறம்புல்லின்
அக்குளுத்துப் புல்லச் சிறிது.”

(கலி-மருதம்-29)
 

எனவும் முறையே தலைமகன் தலைமகள் ஆவார் இருவர் இளமை தீர்திறம் வந்தவாறு காண்க.3
 

தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறமாவது, தெளிவு ஒழிந்த காமத்தின் கண்ணே மிகுதலும் என்றவாறு.
 

இது பெரும்பான்மை தலைமகட்கே உரித்து.
 

“புரிவுண்ட புணர்ச்சியுள் புல்லாரா மாத்திரை
அருகுவித் தொருவரை அகற்றலில் தெரிவார்கண்
செயநின்ற பண்ணினுள் செவிசுவை கொள்ளாது
 


2 முதிரும்முலையார் என்றது தலைவி இளமை தீர்திறம்.

3 ஆண்தலைப்   புள்ளுக்கு   ஏற்ற  பறழ்த்தலையுடைய  மகனே!   என்றதால்   தலைவன்   இளமை
தீர்நிறமும் ‘கொக்குரித்தன்ன கொடு மடாய்’ என்றதால் தலைவி இளமைதீர் திறமும் காண்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்