பக்கம் எண் :
தொடக்கம்
ஏறிய மடல்நிறம் இளமைதீர் திறம் சூ.54431

(இ-ள்)     ஏறிய  மடற்றிறம்  -  மடன்மா  கூறுதலன்றி  மடலேறுதலும்  இளமை தீர்திறம்-தலைவற்கு
இளையனாகாது   ஒத்த  பருவத்தாளாதலும்1   தேறுதல்   ஒழிந்த காமத்து  மிகுதிறம் - இருபத்துநான்காம்
மெய்ப்பாட்டில்  நிகழ்ந்து ஏழாம் அவதி  முதலாக வரும்  அறிவழிகுணன்  உடையளாதலும்; மிக்க காமத்து
மிடலொடு   தொகைஇ - காமமிகுதியானே  எதிர்ப்பட்டுழி  வலிதிற் புணர்ந்த இன்பத்தோடே கூட்டப்பட்டு;
(செப்பிய      நான்கும்-உரை)      கந்தருவத்துட்பட்டு     வழீஇயிற்றாகச்2    செப்பிய    இந்நான்கும்;
பெருந்திணைக்குறிப்பே பெருந்திணைக் கருத்து என்றவாறு
 

மடன்மா   கூறுதல்   கைக்கிளையாம்  மடற்றிறமென்றதனான் அதன் திறமாகிய வரைபாய்தலுங் கொள்க.
இளமைதீர்திறம்  என்றதானாற்றலைவன்    முதிர்ச்சியும்,   இருவரும்    முதிர்ந்த  பருவத்துந் துறவின்பாற்
சேறலின்றிக் காமநுகர்தலுங் கொள்க. காமத்து மிகுதிறம் என்றதனாற் சிறிது தேறப்படுதலுங் கொள்க.
 

இவை     கந்தருவத்துட்டாஅ4  வழீஇயின.  இவற்றுள்    ஏறிய  மடற்றிறமுங்   காமத்து  மிகுதிறமும்
புணர்ச்சிப்பின்  நிகழ்வனவாம்,3 இது, “மடன்மா கூறுமிடனுமாருண்டே’  (தொல்-பொ-கள-11)  என்பதனால்
ஏறுவலெனக் கூறிவிடாதே ஏறுதலாம்.
 

சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்
பிறர்நோயுந் தந்நோய்போற் போற்றி யறனறிதல்
 


1 ஒத்த பருவத்தளாதல் என்றாலும் காட்டிய உதாரணம் மிக்க பருவத்தளானமைக்கே உண்டு.

2 கந்தருவத்துட்பட்டு வழுவுதல்-ஒத்த அன்பினராய் ஒழுகிப்பின் வேறுபடுதல்

3 காமத்து  மிகுதிறம்  இயற்கைப்  புணர்ச்சிக்கு    முன்    நிகழ்வது  என்பதும்  மிக்க  காமத்துமிடல்
திடீரெனக் காம மிகுதியால் எதிர்ப்பட்ட அளவில் புணர்வது ஆதலின் முற்புணர்ச்சியில்லாதது என்பதும்
இவர் கருத்துப் போலும். இளம்பூரணர் யாவுமே புணர்ச்சிப் பின்னர் நிகழ்வன என்றார்.

4 கந்தருவத்துட்படாஅ=கந்தருவத்துட்பட்டு.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்