நிலத்தில் இயற்கை நிலம் என்பது மலை காடு வயல் கடல் எனும் செய்துகொள்ளப்படாத நிலங்களை. செயற்கை நிலம் என்பது கட்டுமலை அரணாக அமைக்கும் காடு, இளமரக்கா போல்வனவற்றை கட்டுமலை இளமரக்கா முதலியன சிறிய அளவினவாதலின்களவைப் பிறர்எளிதில் அறியமுடியும் ஆதலினாலும் அரணாக அமையும் காடு காவலரால் உட்புகாமல் தடுக்கப்படுதலின் களவு நிகழாதாதலினாலும் இயற்கை நிலங்களே பாடலுட்பயில்வனவாம். பொழுதில் செயற்கைப்பொழுது இல்லை. |
5. | மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன்மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே | (5) |
|
ஆ.மொ: இல. |
Forest would occupied by ‘Mayon” Mountainous world occupied by ‘seyon’ Water- logged world occupied by ‘Vendhan’ sea - shore world occupied by Varunan’ These are said to be ‘Mullai’, Kurinji’, ’Marutham’ and Neythal respectivily. |
பி.இ.நூ |
நம்பி. 6, 7 |
குறிஞ்சி பாலை முல்லை மருதம் நெய்தல் ஐந்திணைக்கு எய்திய பெயரே வரையே சுரமே புறவே பழனம் திரையே அவையவை சேர்தரும் இடனே எனவீ ரைந்தும் இயம்பிய நிலனவை |