பயன் எய்துதல் வேண்டும் என்பது வெளிப்படையாகவும் இளமை தீர்ந்தும் புணர்ச்சி விரும்பி யொழுகுதல் பொருந்தா வொழுக்கமாகும். ஆதலின் அதை விடுத்துத் துறவு கொள்ளல் வேண்டும் என்பதும் குறிப்பதாகவும் கூறப்பட்டன. |
56. | நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிரு பாவினும்1 உரியது ஆகும் என்மனார் புலவர் | (56) |
|
ஆ.மொ.இல. |
The poets say that the usage of poets which consists imaginary usage and the factual usage as found in day - to - day life will have ‘Kali’ and ‘Paripadal’ as the matter - forms (which are specially suitable for describing the love aspects). |
நம்பி. 2 இல. அக.378. |
அவைதாம் புனைந்துரை உலகியல் எனுந்திறம் இரண்டினும் தொல்லியல் வழாமல் சொல்லப் படூஉம். |
இளம்பூரணர் |
56. நாடக வழக்கினும்.....................என்மனார் புலவர். |
இதுவும் அகத்திணைக்கு இன்றியமையாத செய்யுளை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) நாடக வழக்காவது, சுவைபட வருவனவெல்லாம் ஓரிடத்து வந்தனவாகத் தொகுத்து கூறுதல். அஃதாவது செல்வத்தானும், குலத்தானும் ஒழுக்கத்தானும், அன்பினானும் ஒத்தார் இருவராய்த் தமரின் நீங்கித் தனியிடத்து எதிர்ப்பட்டார் எனவும், அவ்வழிக் கொடுப்போரு மின்றி அடுப்போருமின்றி வேட்கை மிகுதியாற் புணர்ந்தார் எனவும், பின்னும் அவர் |
1 பாங்கினும் - நச். பாடம். |