பக்கம் எண் :
தொடக்கம்
நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் சூ.56453

ஒழுகி     வரையுங்   காலத்து,  அந்நிலத்தியல்பு  பற்றி  ஏறுதழுவி  வரைந்து  கொள்வரெனப்  புலனெறி
வழக்காகச்  செய்தல்   இக்கலிக்குரித்தென்று  கோடலும்  பாடலுள் அமையாதன என்றதனாற்1 கொள்க. அது
“மலிதிரையூர்ந்து”   என்னும்   (4)  முல்லைக்கலியுள்  “ஆங்கனயர்வர்  தழூஉ”  என்னுந்  துணையும் ஏறு
தழுவியவாற்றைத்  தோழி  தலைவிக்குக்   காட்டிக்கூறிப்   “பாடுகம்வம்மின்”   என்பதனாற்  தலைவனைப்
பாடுகம்  வாவென்றாட்கு,   அவளும்  “நெற்றிச்சிவலை மகள்”  “ஒருக்கு நாமாடு  மகன்” என்பனவாற்றான்
அலரச்சம் நீங்கினவாறும், அவன்றான் வருத்தியவாறுங் கூறிப் பாடிய பின்னர்த் தோழி.
 

“கோளரி தாக நிறுத்த கொலையேற்றுக்
காரி கதனஞ்சான் பாய்ந்த பொதுவற்கே
யார்வுற் றெமர் கொடை நேர்ந்தா ரலரெடுத்த
வூராரை யுச்சி மிதித்து”

(கலி 104)
 

என எமர் கொடை நேர்ந்தாரெனக் கூறியவாறுங் காண்க.
 

இவ்வாறே     இம் முல்லை   அகப்பொருளோடு கலந்துவருங்  கைக்கிளை பிறவுமுள; அவையெல்லாம்
இதனான்   அமைத்துக்     கொள்க.   புனைந்துரைவகையாற்    கூறுபவென்றலிற்    புலவர்  இல்லனவுங்
கூறுபவாலோவெனின்,     உலகத்தோர்க்கு    நன்மை  பயத்தற்கு  நல்லோர்க்குள்ளனவற்றை   ஒழிந்தோர்
அறிந்தொழுகுதல்    அறமெனக்கருதி,    அந்நல்லோர்க்குள்ளனவற்றிற்  சிறிது  இல்லனவுங்   கூறுதலன்றி,
யாண்டும் எஞ்ஞான்றும் இல்லன கூறாரென்றற்கன்றே நாடகமென்னாது வழக்கென்பாராயிற்றென்பது.
 

இவ்வதிகாரத்து     நாடகவழக்கென்பன,      புணர்ச்சி     உலகிற்குப்  பொதுவாயினும்  மலைசார்ந்து
நிகழுமென்றுங்,2  காலம்   வரைந்தும்,3 உயர்ந்தோர்  காமத்திற்குரியன4  வரைந்தும், மெய்ப்பாடு தோன்றப்
பிறவாறுங் கூறுஞ் செய்யுள் வழக்கம். இக்கருத்
 


1 பாடல்சான்ற    என்றதனால்   பாடலுட்  சாலாதனவும்  உள  என்பது  பெறப்பட்டமையின்  அதனை,
பாடலுள் அமையாதன என்றதனால், என்றார்.

2 அத்திணை-5.

3 கூதிர்யாமம் (7) பனியெதிர்பருவம் (8).

4 பிறப்பேகுடிமை ஆண்மை முதலியன.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்