3. காடுறையுலகம் முதலிய நான்கும் நேர் வரிசை முறையில் முல்லை முதலியவற்றிற்கு இயைதல் நிரல்நிறையாகும். 4. சொல்லவும் என்பதில் உள்ள உம்மை முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற பெயர் முறைகளாற் சொல்லப்படுதலேயன்றிப் பெருவழக்கான காடு நாடு மலை கடல் என்ற பெயராலும் சொல்லப்படும் என்பதாம். 5. கலித்தொகை: பாலை, குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல். ஐங்குறுநூறு : மருதம் நெய்தல் குறிஞ்சி பாலை முல்லை. ஐந்திணை எழுபது: குறிஞ்சி முல்லை பாலை மருதம் நெய்தல். இப்படி முறையன்றிக் காணப்படுதல் காண்க. 6. ஏகதேச காரணம் - ஏதோ ஓர் காரணம். |