பக்கம் எண் :
தொடக்கம்
அகத்திணையியல் சூ.15

அகப்பொருளாவது   போக   நுகர்ச்சியாகலான்  அதனான்  ஆய  பயன்  தானே  அறிதலின்7  அகம்
என்றார்.
  

புறப்பொருளாவது,  மறஞ்செய்தலும்  அறஞ்செய்தலும்  ஆகலான்  அவற்றான் ஆய பயன் புலனாதலின்
புறம், என்றார்.
  

அஃதற்றாக,  8அறம்,  பொருள்,  இன்பம்,  வீடு என உலகத்தோரும் சமயத்தோரும் கூறுகின்ற பொருள்
யாதனுள் அடங்குமெனின், அவையும் உரிப்பொருளினுள் அடங்கும். என்னை? வாகைத் திணையுள்,
  

“அறுவகைப் பட்ட பார்ப்பனப் பக்கமும்
ஐவகை மரபின் அரசர் பக்கமும்
இருமூன்று மரபின் ஏனோர் பக்கமும்”

(புறத் 16)
 

என இல்லத்திற்கு உரியவும்,
  

“காமம் சான்ற கடைக்கோட் காலை
ஏமம் சான்ற மக்களொடு துவன்றி
அறம்புரி சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே”

(கற்பு-51)
 

என நான்கு வருணத்தார் இயல்பும்,
 

“நாலிரு வழக்கின் தாபதப் பக்கமும்”

(புறத்-16)
 

எனவும்,
  

“காமம் நீத்த பாலி னானும்”

(புறத் - 17)
 

எனவும்,  புறமாகிய  வீடுபேற்றிற்குரிய  வானப்பிரத்த  சந்நியாசிகள்  இயல்பும்  கூறுதலின்,  அறமும் வீடும்
அடங்கின.  வெட்சி  முதலாகத்  தும்பை  ஈறாகக்  கூறப்பட்ட பொருண்மையும், வாகையிற் கூறப்பட்ட ஒரு
சாரனவும், காஞ்சிப்படலத்து  நிலையாமையும்,  பாடாண்  பகுதியிற்  கூறப்பட்ட பொருண்மையுமாகிய இவை
எல்லாம்  பொருளின்  பகுதியாதலின்,  அப்பொருள்  கூறினாராம். அகத்திணையியலானும்  களவியலானும்
கற்பியலானும்


7. தானே தன் அகத்து அறிதலின்

8. தானே தன் அகத்தறிவது அகம் எனவும் பிறர்க்குப் புலனாவது புறமாகவும் ஆகுக.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்