பக்கம் எண் :
தொடக்கம்
56தொல்காப்பியம் - உரைவளம்

இனிக்   காலத்தால்   திணையாமாறு   உணர்த்துவான்   எடுத்துக்  கொண்டார்.   இஃது  அவற்றுள்
முல்லைத்திணைக்குக் காலம் வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்) காரும்  மாலையும்   முல்லை   கார்காலமும்   மாலைப்பொழுதும்   முல்லைத்  திணைக்குக்
காலமாம்.
  

காராவது  மழை  பெய்யுங்காலம்,  அஃது  ஆவணித்  திங்களும்  புரட்டாசித் திங்களும், மாலையாவது
இராப் பொழுதின் முற்கூறு.
  

7.குறிஞ்சி, கூதிர்..................புலவர்.
 

இது குறிஞ்சிக்குக் காலம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று,
  

(இ-ள்)  குறிஞ்சி  -  குறிஞ்சித்  திணைக்குக்  காலமாவது,  கூதிர் யாமம்  என்மனார் புலவர் - கூதிர்
காலமும் யாமப்பொழுதும் என்று கூறுவர் புலவர்.
  

கூதிராவது ஐப்பசித் திங்களும் கார்த்திகை திங்களும்.  
 

யாமமாவது இராப்பொழுதின் நடுக் கூறு.
  

நச்சினார்க்கினியர்
  

6. காரு மாலையு...................புலவர்.
  

இது  முதலிரண்டனுள்  நிலங்  கூறிக் காலங் கூறுவான் முல்லைச்குங் குறிஞ்சிக்கும் பெரும் பொழுதுஞ்
சிறுபொழுதுங் கூறுதல் நுதலிற்று.
  

இதன் பொருள் :- காரும் மாலையும்  முல்லை - பெரும் பொழுதினுட் கார்காலமுஞ் சிறுபொழுதினுள்
அக்காலத்து   மாலையும்   முல்லையெனப்படும்;  குறிஞ்சி  கூதிர்  யாமம்   என்மனார் புலவர் - பெரும்
பொழுதினுட் கூதிர்க் காலமுஞ் சிறுபொழுதினுள் அதன் இடையாமமும் குறிஞ்சி எனப்படும் என்றவாறு.
  

முதல்கரு  உரிப்பொருளென்னும்  மூன்று  பாலுங்  கொண்டு ஓர் திணையாமென்று கூறினாரேனும் ஒரு
பாலினைந்திணையென்று அப்பெயரானே கூறினார்; வந்தான் என்பது உயர்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்