முத்து. அக.18 |
எற்பாடுநெய்தக் குரிய தாகும். |
இளம்பூரணர் |
9. வைகறை .................. மருதம். |
இது மருதத் திணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) வைகறை விடியல் மருதம்-வைகறையும் விடியலும் மருதத்திற்குக் காலமாம். |
வைகறையாவது இராப்பொழுதின் பிற்கூறு. விடியலாகும் பகற்பொழுதின் முற்கூறு. பருவம் வரைந்தோதாமையின் அறுவகைப் பருவமும் கொள்ளப்படும். இது1 நெய்தற்கும் ஓக்கும். |
(9) |
10. எற்பாடு ........................... தோன்றும் |
நெய்தல் ஆதல் மெய்பெறத் தோன்றும். |
இது நெய்தற்றிணைக்குக் காலம் உணர்த்துதல் நுதலிற்று, |
(இ-ள்) எற்பாடு-எற்படுபொழுது, நெய்தல் ஆதல் மெய்பெற தோன்றும்-நெய்தற்றிணைக்குக் காலமாதல் பொருண்மை பெறத் தோன்றும். |
எற்பாடாவது பகற்பொழுதின் பிற்கூறு (10) |
நச்சினார்க்கினியர் |
9. வைகறை விடியன் ................. தோன்றும் |
இனிச் சிறுபொழுதே பெறுவன கூறுகின்றது. |
இதன் பொருள் :- வைகுறு விடியல் மருதம் - வைகறையும் விடியற்காலமும் மருதமாதலும் எற்பாடு நெய்தல் ஆதல் மெபெறத் தோன்றும்-எற்பாடுகாலம் நெய்தலாதலும் பொருள் பெறத் தோன்றும் என்றவாறு. |
வைகுறுதலும் விடியலும் என்னும் உம்மை தொக்கு நின்றது. |
செவியறிவுறுத்தலைச் செவியறிவுறூஉ (423) என்றாற்போல வைகுறுதலை வைகுறு என்றார். அது மாலையாமமும் இடை |
1. இது - அறுவகைப்பருவமும் கொள்ளப்படுதல். |