பக்கம் எண் :
தொடக்கம்
74தொல்காப்பியம் - உரைவளம்

“குக்கூ என்றது கோழி, அதனெதிர்
... ... ... ... ... ... ... ... ...
தோள்தோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே.”

  

(குறுந்-157)   என்பதில், வைகறை தலைக்கோழி கூவும் விடியாப்பொழுதென  விளக்கப்படுதலும் காண்க.
சிவஞான   முனிவர்    எடுத்துக்காட்டும்   முருகாற்றுப்படையடிகளும்,  அவர்  கொள்ளும்   பொருளில்,
வைகறையும் விடியலுமொன்றெனற்கு மாறாக அவை இரு வேறு பொழுதுகளாகவே விளக்குகின்றன.
  

“முட்டாட் டாமரைத் துஞ்சி, வைகறை
கட்கமழ் நெய்த லூதி, எற்படக்
கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர்
அஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்கும்”

(முருகு-வரி-73-76)
  

என்பதவ்வடிகள்.  இதில்,  வண்டினம்  இரவில்  தாமரையில்  தூங்கிவைகறையில் நெய்தல் மலருதி, பிறகு
ஞாயிறெழும்  விடியலில்  சுனைப்பூக்களி  லொலிக்கும்  எனக்கூறி,  இரவு, வைகறை விடியல், என மூன்று
மூவேறு  பொழுதெனத்  தெளிக்கப்படுகின்றது. எனில், இதில் “எல்பட”  என்பதற்கு “ஞாயிறு எழ” எனப்
பொருந்தாப்   பொருள்   கூறுவதினும்,  “ஞாயிறடையும்  பகலிறுதிப்   பொழுதில்”   எனக்கொள்ளுவதே,
சொல்லும்  மரபும்  சுட்டும்  நல்ல   கருத்தாகும்; எனவே  விடியலுக்கு  முன் வைகறையில் விழித்தெழும்
வண்டினம்    நெய்தலூதி”    மாலைக்குமுன்    பகல்    மாய்ந்து   சுடர்படும்   எற்பாட்டில்   சுனை
மலர்களிலொலிக்கும்  என்பதே  இவ்வடிகளுக்கு  நேரிய  செம்பொருளாகும்.  இனி   வைகறை  விடியல்
எனுமிரு சிறுபொழுதும் ஒழிய எற்பாடு இவற்றின் வேறாய பகலிறுதிப் பொழுதென்பது.
  

“பகல்மாயந்திப் படு சுடரமையம்” என அகம் 48ஆம் பாட்டிலும் தெளிக்கப்படுகிறது. இன்னும்.
  

“படுசுட ரடைந்த பகுவாய் நெடுவரை
முரம்புசேர் சிறுகுடிப் பரந்தமாலை.”

(நற்-33)
 

எனும்  இளவேட்டனார்  பாட்டும்,  இரவின்  முதற்பொழுதான  மாலையை  எற்பாட்டின்  பிற்பொழுதாகக்
கூறுதலும் பகலிறுதிப்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்