பொழுதைப் படுசுடர் எனச் சுட்டுதலும் காண்க. “நெய்தல் கூம்ப நிழல்குணக் கொழுக, -கல்சேர் மண்டிலம் நிவந்துநிலம் தணிய” எனும் ஒளவை நற்றிணை (187) ஆம்பாட்டு மதுவே கூறுகிறது. “ஒன்றது மென்ற தொன்றுபடு நட்பில்” (நற்-109) எனும் பெரும்பதுமனார் நற்றிணைப்பாட்டிலும் “உலமரக்கழியுமிகப் பகல்மடி பொழுதே” என வருதலறிக. இன்னும் இரவின் முதற்பொழுதோ மாலைக்கு முந்திய பகலிறுதில் பகுதியைக் “கல்சுடர் சேரும் கதிரமாய் மாலை” (321) என மள்ளனாரும் கூறுதல் காண்க. இளைய பல பழம் புலவர் பாட்டுகளால் பொழுது புலர்ந்து கதிர் விரியும் இளவெயிற் காலையாய பகற்பொழுதின் முதற்பகுதியே விடியலென்றும்2 இருள் புலருமுன்னுள்ள இரவின் இறுதிப்பகுதி நேரமே வைகறையென்றும், சுடர்படும் பகலிறுதிக்காலமே எற்பாடென்றும் மயக்கத்திற் கிடனின்றித் தெளியக்கிடக்கின்றது. | இன்னும், “முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் பாலையென முறைசெய்தற்கேது, மாலை, யாமம், வைகறை, காலை நண்பகல் என்னும் சிறு பொழுதின் கிடக்கை முறையேயன்றி வேறின்மையானும் ஏனைத்திணைகட்குச் சிறுபொழுது ஒரோவொன்றேயாகலின், மருத மாத்திரைக்கிரண்டு கோடல் பொருந்தாமையானும் அஃதுரையன்றென மறுக்க” என்னும் சிவஞான முனிவர் கூற்றும் பொருந்தாமையறிக. சிறுபொழுது ஐந்து மாலை முதல் நண்பகல் வரையெண்ணி நிறுத்தப்படின், ஒரு நாளுலப்புறாமல் பிற்பகல் பெயரும் பயனுமின்றி வீணே விடப்படுமாகலின் ஈண்டு எண்ணப் பெறாத பிற்பகலாகிய சிறுபொழுதொன்றுண்மையும் அதுவே எற்பாடாவதும் விளக்கமாகும். | அன்றியும், அன்பினைந்திணைமுறை சிறுபொழுதின் கிடக்கை முறைபற்றியதேயாகும் என்பதற்கு முனிவரவர்களின் கூற்றைத் தவிரப் பிறிதாதரவின்மையானும், பெரும்பொழுதாறினை ஐந்து திணைக்கு ஒரோவொன்றாய்க் கொடுத்தமையாதலாலும், சிறுபொழுதுகளு மவ்வாறமைதல் வேண்டா குறிஞ்சிக்குக் கூதிரொடு முன்பனியும், பாலைக்கு வேனிலொடு பின்பனியும் ஆக இவ்விரண்டு பருவந்தந்து வைத்தும், மருதத்திற்கும் நெய்தலுக்கும் பெரும் பொழுதெதுவும் பிரித்துரிமை செய்யா |
|
|