மலும் சூத்திரிக்கும் ஆசிரியர் முறையிற் பொருத்தம் காணும் முனிவரவர்கள் மருதத்திணை யொன்றற்குச் சிறுபொழுதிரண்ட மைத்தலில் பொருந்தாப் பெருந்தவறு காணுதற்குரிய நியாயத்தை விளக்கினார்களுமில்லை. இனி, பிற்றைய நாற்கவிராச நம்பியார் சிறுபொழுதைந்தென்று கூறுதலால், பண்டைப் புலவர் பாட்டுகளைப் பொய்யாக்கித் தொல்காப்பியர் சூத்திரங்களுக்கும் புதுப்பொருள் காண்பது உரையறமாகாது. மேலும் வைகறையும் விடியலும் மருதத்திணையான ஊடலுக்கு உரித்தாமாறும், மாலையையும் யாமத்தையும் பரத்தையர் வீட்டிற்கழித்த தலைவன் தன் மாட்டு மீட்டு வரும் வைகறை விடியற்காலங்களில் தலைவி அவனோடூடுதல் இயல்பாவதும், பிறகு பொழுதேறி விருந்தினர்க்கு வேளாண்மை செய்தலால் ஊடல் தீர்தல் முறையென்பதும், மருதக்கலி நெய்தற்கலி முதலிய பண்டைய அகத்துறைப் பாட்டுகளால் இனிது விளங்கும். |
ஊடுமிடத்தெல்லாம் கூடுதலின்றியமையாமை பெறுதற்கில்லை. ‘கூடியமுயங்கப்பெறின்’ அதற்கின்பம் என வள்ளுவர் விதந்து கூறுதலாலேயே, ஊடுந்தொறும் உடனே கூடல் ஒருதலையாகாது. கூடப் பெரும் பொழுதுகளும் உளவாதல் இயல்பென்பது பெறப்படும். அன்றியும், ஊடல் அதன்பின் கூட நேர்ந்துழி; அக்கூட்டத்திற்கு இன்பம் மிகுக்கும் என்பது இக்குறட் பொருள் ஆவதன்றி உடனே கூட நேராப் பொழுதுதெல்லாம் ஊடல் நிகழாது என்பது கருத்தாகாமை வெளிப்படை. இனி, |