முற்படக் கிளந்த எழுதிணை எனவே பிற்படக் கிளக்கப்படுவன எழுதிணை உள என்பது பெறுதும். அவையாவன, வெட்சி முதலாகப் பாடாண்டினை ஈறாகக் கிடந்த எழுதிணையும், இவ்வகையினான் இவ்வதிகாரத்திற் கூறப்பட்ட பொருள் பதினான்கு என்பதூஉம்; அவையும் | ‘வெட்சி தானே குறிஞ்சியது புறனே’. | (புறத்-1) | எனவும், | “வஞ்சி தானே முல்லையது புறனே” | (புறத்-6) | எனவும், இவ்வாறு கூறுதலின்2 ஏழாகி அடங்கும் என்பதூஉம் கொள்க. | அஃதேல்; மெய்ப்பாட்டியலானும் உவம இயலானும் செய்யுள் இயலானும் மரபு இயலானும் கூறப்பட்ட பொருள் யாதனுள் அடங்கும் எனின், அவை கருப்பொருளும் அப்பொருளாற் செய்யப்பட்டனவும் அப்பொருளின் குணம் முதலியனவும் அப்பொருளின் குறிப்பு நிகழ்ச்சியும் ஆதலின், அவையும் கருப்பொருளின்பால் நடுவண் ஐந்திணையுள் அடங்கும் என்ப. அவை சிறுபான்மை கைக்கிளை பெருந்திணையினும் வரும். அவ்வெழுதிணையும் ஆவன - கைக்கிளை, முல்லை, குறிஞ்சி, பாலை, மருதம், நெய்தல், பெருந்திணை. | கைக்கிளை என்ற பொருண்மை யாதோ எனின், கை என்பது சிறுமை பற்றி வரும்; அது தத்தம் குறிப்பிற் பொருள் செய்வதோர் இடைச்சொல்; கிளை என்பது உறவு; பெருமையில்லாத தலைமக்கள் உறவு என்றவாறு; கைக்குடை; கையேடு, கைவாள், கைஒலியல், கைவாய்க்கால் எனப் பெருமையில்லாதவற்றை வழங்குபவாதலின். | நடுவண் ஐந்திணைக்கண் நிலமும் காலமும் கருப்பொருளும் அடுத்துப் புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல் ஊடல் எனச் சொல்லப்பட்ட அவ் உரிப்பொருள், ஒத்த அன்பும் ஒத்த குலனும் ஒத்த இளமையும் உளவழி நிகழுமாதலின், அது |
2. வெட்சி குறிஞ்சிக்குப் புறன் என அடக்கிக் கூறுதலான். குறிஞ்சியும் வெட்சியும் அகமும் புறமுமாய் அடங்கும் ஒரு பொருள் எனக் கொள்ளல் வேண்டும். இப்படியே பிறவும். |
|
|