களவில் நிகழும் பிரிவுகளான ஒருவழித் தணத்தல் வரைவிடை வைத்துப் பொருள் வயிற்பிரிதல் உடன் போக்கு என்பன. கற்பில் நிகழும் பிரிவுகளாவன: ஓதல், தூது, பகை, நாடு, காவல், பொருளீட்டல், பரத்தை என்பன. |
ஒருவழித்தணத்தல் என்பது களவில் தலைவன் வந்து கூடிச்சென்று சிறிது இடையீடு நிகழ்வதைக் குறிப்பதாகலின் அஃது ஒரு வருந்தத் தக்க பிரிவாகக் கருதப்படாது. பரத்தையிற் பிரிவு ஊடலுக்கு ஏதுவாதலினாலும் பிரிவால் தலைவனுக்கு வரும் ஏதம் இன்மையின் தலைவி அதுகுறித்து இரங்கல் இன்மையானும் ஓரூரில் நிகழ்வதாதலினாலும் ஏனைப்பிரிவுகள்போல் கருதப்படாது, எனவே மற்றைப் பிரிவுகளே பாடலுள் பயில்வனவாகும். நிலைபெறத்தோன்றினும் என்பது பயின்று தோன்றினும் என்றவாறு. |
இனி, இளம்பூரணர் இருவகைப் பிரிவாவன தலைவன் தலைவியைப் பிரிதலும் உடன் கொண்டு பிரிதலும் என்பர். தலைவியைப் பிரிதல் என்பது களவு கற்பு இரண்டிலும் நிகழ்வது. உடன் கொண்டு பிரிதல் என்பது களவில் நிகழ்வது பின்னரக் “கொண்டு தலைக் கழிதலும்” (17) என்னும் சூத்திரத்தில் உடன் கொண்டு பிரிதலைப் பாலையின்பாற்படும் என இளம்பூரணரே பொருள் கூறியிருத்தலின் இங்கும் அது பாலையின் பாற்படும் என்றதுசிறவாது. |
நச்சினார்க்கினியர் இருவகைப் பிரிவாவன காலிற்பிரிவும் கலத்திற்பிரிவும் என்பர். முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை “(32) என்றதனால் காலிற்பிரிவு மகடூஉவொடு பிரிதலும் தனித்துப் பிரிதலும் என்பன என்றும் கொள்ளலாமே. |
பாரதியார் வேனிற்பிரிவும் பின்பனிப்பிரிவும் எனக்கொண்டு “அவை பிரிதல் நிமித்தங்களாக அமையாது பாலையாகவே உருப்படினும் பாலைக்குரியதாகவே ஆகும் என்று கூறுவர்” என்பர். அப்படியாயின் மற்றைக் குறிஞ்சி முதலிய ஒழுக்கங்களும் நிமித்தங்களாக அமையாது குறிஞ்சி முதலிய வாகவே அமைவனவற்றையும் அவ்வவ்வொழுக்கங்களே எனக் கூறுதல் வேண்டும். கூறாமையின் அவர் கூற்று ஏற்புடைய தன்று. |
இனி இருவகைப் பிரிவென பாலைத்திணைக்கே யுரிய பிரிவும் பிறதிணைகளுள் வரும் பிரிவும் என்று கொள்ளலும் |