பக்கம் எண் :
தொடக்கம்
 1

தொல்காப்பியம் - பொருளதிகாரம்

(உரைவளம்)


அகத்திணையியல்
  

1.

கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய்
முற்படக் கிளந்த எழுதிணை என்ப.
(1)

   

ஆங்கில மொழிபெயர்ப்பு  

இலக்குவனார்.
  

From ‘Kaikkilai’ to ‘Perunthinai’  are  the  Seven  conducts  described foremost, say the
scholars.
  

பிற்கால இலக்கண நூல்கள்: நம்பி அகப்பொருள்: 1
  

மலர்தலை யுலகத்துப் புலவோர் ஆய்ந்த
அருந்தமிழ் அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை
பெருந்திணை எனஎழு பெற்றித் தாகும்.

  

இலக்கண விளக்கப் பொருள் : அகத்திணையியல். 4.
  

அதுவே கைக்கிளை ஐந்திணை ஏனைப்
பெருந்திணை எனஎழு பெற்றித் தாகும்.

  

தொன்னூல் விளக்கம் 190.
  

அகப்பொருள் புறப்பொருள் ஆயிரண்டவற்றுள்
பெருகிய கைக்கிளை பெருந்திணை குறிஞ்சி
ஆதிஐந் திணையென அகப்பொருள் ஏழே.......

  

முத்து வீரியம் அகத்திணை 1.
 

அகப்பொருள் கைக்கிளை ஐந்திணை பெருந்திணை
எனஎழு வகைப்படும் என்மனார் புலவர்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்