கருப் பொருள் மயக்கம் உண்டு. புணர்தல் முதலிய ஒழுக்கங்கள் குறிஞ்சி முதலிய எல்லா நிலங்களிலும் நிகழுமாயினும் நூலார் அவ்வந்நிலங்களுக்கே உரிமைப்படுத்தினர். ஆதலினாலும் அவ்வுரிப் பொருள் கொண்டே செய்யுளுக்கு திணை வகுத்தல் வேண்டும் ஆதலினாலும் உரிப்பொருள் மயக்கம் விலக்கப் பட்டதாம் இரண்டு ஒழுக்கங்கள் சேரக்கூறப்படின் அச்செய்யுள் எத்திணைப் பாற்படும் என்பது அறியப்படாதாம். ஒரே காலத்தில் இரண்டொழுக்கம் நடைபெறுதல் இல்லை; செய்யுள்களும் காணப்படவில்லை. உதாரணங்கள் யாவற்றிலும் உரிப்பொருளில் பொழுதும் கருப் பொருளும் மயங்கியனவாக வுளவேயன்றி வேறில்லை. அதனால் நச்சினார்க்கினியர், திணைமயக்கத்துக்கு, ஓர் உரிப் பொருள் மயங்குதலும் ஓர் உரிப்பொருளோடு ஓர் உரிப்பொருள் மயங்குதலும் ஓர் உரிப்பொருள் நிற்றற்குரிய விடத்தே பிறிதோர் உரிப்பொருள் நிற்றலும் கூறுதல் பொருந்தாது. |
15. | உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே | (15) |
|
ஆ.மொ.இல. |
Those other ‘than ‘Uripporul’ may overlap. |
பி.இ.நூ. |
நம்பி 251 இல.வி.அ 22 முன் சூத்திரத்து உள்ளனவே. |
நச்சினார்க்கினியர் உரைக்கு ஏற்ற இலக்கண விளக்கம் அகத்திணை யியற் சூத்திரம் 395 |
ஒருதலைக் காமமும் ஒவ்வாக்காமமும் விரவியும் வரூஉம் மரபின என்ப. |
இளம்பூரணர் |
15. உரிப்பொருள். . . . . . பெறுமே. (15) |
இஃது எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. |
(இ-ள்) உரிப்பொருள் அல்லன - உரிப்பொருள் அல்லாத கருப்பொருளும் முதற்பொருளும், மயங்கவும் பெறும் - மற்றொரு திணையொடு சேர நிற்கவும் பெறும். |