பக்கம் எண் :
தொடக்கம்
புணர்தல் பிரிதல் இருத்தல் சூ.16127

16.

புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
ஊடல் அவற்றின்
1 நிமித்தம் என்றிவை
தேருங் காலை திணைக்குஉரிப் பொருளே
(16)

 

ஆ.மொ.இல.
  

(‘Punarthal,’ ‘Pirithal’, ‘Iruththal’, ‘Irangal’ and ‘Udal’ and their causes are the ‘Uripporul” of
‘thinais’ if we examine the aspects of love)
  

பி.இ.நூ.
  

தமிழ் நெறிவிளக்கம். 13
  

புணர்தலும்   பிரிதலும்   இருத்தலும்   ஊடலும்  அனைவயின்  இரங்கலும்  அவற்றின்  நிமித்தமும்
களவோடு கற்பெனக் கலைநர் கூறிய அளவில் உரிப்பொருள் ஆகும் என்மனார்.
  

நம்பி.25
  

புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும்
இரங்கலும் இவற்றின் நிமித்தமும் எனவாங்கு
எய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தே

இல.வி.அ.21
  

புணர்தலும் பிரிதலும் இருத்தலும் ஊடலும்
இரங்கலும் இவற்றின் நிமித்தமும் எனவாங்கு
எய்திய உரிப்பொருள் ஐயிரு வகைத்தவை
ஓரிரண்டு ஓரிரண்டு உரைத்த ஐந் திணைக்கும்
நேரும் என்மனார் நெறியுணர்ந் தோரே
 

இளம்பூரணர்
  

16. புணர்தல் பிரிதல். . . . . . பொருளே.
  

இஃது உரிப்பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  புணர்தல், பிரிதல்,  இருத்தல், இரங்கல், ஊடல் அவற்றின் நிமித்தம் என்று  இவை-புணர்தலும்,
பிரிதலும்,  இருத்தலும்  இரங்கலும்,   ஊடலும்,   அவற்றின்   நிமித்தமும்  என்று  சொல்லப்பட்ட இவை,
தேரும் காலை திணைக்கு உரிப்பொருள்-ஆராயுங்காலத்து ஐந்திணைக்கும் உரிப்பொருளாம்.


1. இவற்றின்-பாடம்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்