பக்கம் எண் :
தொடக்கம்
கொண்டுதலைக் கழிதலும் சூ.17137

வரிசைப்படுத்தல்   வேண்டும்   என்றும்,   பாலையானது   முல்லையும்  குறிஞ்சியும் முறைமையில் திரிந்து
பாலை   என்பதோர்   வடிவம்   கொள்ளுமாதலின்   குறிஞ்சிக்கும்  முல்லைக்கும்  நடுவில்  கூறப்படல்
வேண்டும்  என்பதும்  அதனால்  அது  நடுவணது  என்னும் பெயர் சிறப்பாகப் பெற்றது என்றும், புணர்தல்
முதலிய   ஒழுக்கங்களே   யன்றி   அவற்றின்  நிமித்தங்களும் ஐந்திணைக்கும் சிறந்த உரிப்பொருள்களாம்
என்றும் கொள்க.
  

17.   
  

கொண்டுதலைக் கழிதலும்1 பிரிந்துஅவண் இரங்
கலும்
2 உண்டுஎன மொழிப ஓரிடத்தான
(17)

  

ஆ.மொ.இல.
  

The elipement and the wailing of lady-love in separation may take place at sometimes.
  

இளம்பூரணர்
  

17. கொண்டுதலைக்...................தான
  

இதுவும், ஒருசார் உறுப்புப் பொருள் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  கொண்டுதலைக்  கழிதலும்  உண்டு,  பிரிந்து  அவண் இரங்கலும் உண்டு. ஓர் இடத்தான் என
மொழிப-ஒரே இடத்துக்கண் என்று கூறுப.
  

உண்டு  என்பதை  இரண்டிடத்தும்  கூட்டுக.1 அன்றியும் உண்டென்பதனை இல்லென்பதன் மாறாக்கி
விரவுத்திணை
  


1. கழியினும்
 

2. இரங்கினும்-பாடம் நச்.
  

1. உண்டு-உள்ளது.   ஒருமை   கழிதலும்   இரங்கலும்   உள  எனப்பன்மையாற்  கூறாமையின்  கழிதல்
உண்டு. இரங்கல் உண்டு எனத்தனித்தனிக் கூட்டல் வேண்டும் என்றார்.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்