பொழுதின் உரிப்பொருளின் பயனையே தாமும் உடையனவாகும் என்பது இச்சூத்திரப்பொருள். இதனால் கருப்பொருள் மயக்கம் கூறப்பட்டது. |
தாமரைக் கண்ணியை தண்ணறுஞ் சாந்தினை நேரிதழ்க் கோதையாள் செய்குறி நீவரின் |
(கலித்.52) |
இது குறி விலக்கல் ஒழுக்கமாய்க் குறிஞ்சிக்குரியது. இதில் தலைவன் தாமரைக் கண்ணியனாய் வந்தான் என்பதால் தாமரை மருத நிலக்கருப்பொருளாதலின், அது அதற்கேற்ப ஊடற் பொருள் இன்றிக் குறிஞ்சிப் பொருளுக்கே துணை செய்வதாய்ப் பயன்பட்டது என்க. |
வந்த நிலத்தின் பயத்த என்பதற்குத் தாம் மயங்கி வந்த நிலத்தின் பொருளே தமக்கும் ஏற்புடையனவாகத் தம் நிலத்தின் பொருளைவிட்டுப் பயன்படுவனவாம் என்க. |
22. | பெயரும் வினையும் என்று ஆயிரு வகைய திணை தொறும் மரீஇய திணை நிலைப் பெயரே. | (22) |
|
ஆ. மொ. இல. |
The names of particular region current in the said region are of two kinds-the name of noun and the name of verb. |
இளம்பூரணர்
|
22. பெயரும் வினையுமென்று...............பெயரே. |
இதுவும், கருப்பொருளின் பாகுபாடாகிய மக்கட்டிறம்1 உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) பெயரும் வினையும் என்று அ இருவகைய - குலப் பெயரும் தொழிற்பெயரும் என அவ்விருவகைப்படும், திணைதொறும் மரீஇய திணைநிலைப்பெயர் - திணைதொறும் மருவிப் போந்த திணை நிலைப்பெயர். |
|
1. தெய்வம் உணாவே ( ) என்னும் சூத்திரத்தில் அவ்வகை பிறவும் என்றதனால் தழுவிக் கொள்ளப்பட்ட மக்களது திறம். |