“ஆடூஉத் திணைப்பெயர் ஆயர் வேட்டுவர் வரூஉம் கிழவரும் உளர் ஆவயின் வரும் கிழவியரும் உளர்” |
எனக் கொண்டு கூட்டித் திணைப்பெயர் என்பதற்குத் திணைதொறும் மரீஇய பெயர் எனக்கூறி, திணைதொறும் மரீஇய பெயராகிய ஆயர் வேட்டுவர் என்பதிலிருந்து திணைக்கு உரிமையுடைய பெயராகிய ஆயர்மகன் வேட்டுவர் தலைவன் போலும், திணை நிலைப்பெயர் (கிளவித் தலைவர் பெயர்) முல்லை குறிஞ்சிகளுக்கு வரும் எனப்பொருள் கூறினார். |
இளம்பூரணர் திணைதொறு மரீஇய பெயரிலிருந்து திணை நிலைப்பெயர் வரும் என்று கூறவில்லை. கருத்து வகையால் இருவரும் ஒருவரே. பாரதியார் விளக்கங்களும் இக்கருத்துள் அமையும். |
முன் சூத்திரத்தும் இச்சூத்திரத்தும் கூறப்பட்டவற்றிலிருந்து, பாடலில், நிலப்பெயரும், தொழிற் பெயரும் உரிப் பொருட் பெயராகிய திணைநிலைப் பெயரும் (கிளவித்தலைவர் பெயரும்) ஆகிய மூன்று பெயர்கள் ஆளப்படும் என்பது புலனாம். கிளவித் தலைவர் பெயர் பொதுவன் சிலம்பன் போலும் நிலச் சிறப்புப் பெயராலும் ஆயன் வேட்டுவன் போலும் தொழிற் சிறப்புப் பெயராலும் ஆயர் மகன் குறவர் மகன் போலும் பொதுப்பெயரடியாக வரும் பெயராலும் ஆளப்படும் என்பதும் புலனாம். |
24. | ஏனோர் மருங்கினும்1 எண்ணுங் காலை ஆனா வகைய திணைநிலைப் பெயரே | (24) |
|
ஆ.மொ.இல. |
Among others also, if we examine, there may be found the names of region. |
இளம்பூரணர் |
24. ஏனோர் மருங்கினும்....................பெயரே. |
இது, குறிஞ்சி முதலாய திணைக்கண் வரும் திணைநிலைப் பெயர் உணர்த்துதல் நுதலிற்று. |
|
1. பாங்கினும் - பாடம். |