எனும் வெண்பாவில் நிலந்திருத்தி உழுவாரின் பெண் தலை மகளாதலறிக. |
25. | அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும்1 கடிவரை யிலபுறத்து என்மனார் புலவர் | (25) |
|
ஆ.மொ.இல. |
the scholars say that having heroes among servents and officials is not prevented in literature dealing with ‘Puram’ (matter other than true love). |
இளம்பூரணர்
|
25. அடியோர் பாங்கினும்....................புலவர் |
இது நடுவணைந் திணைக்குரிய தலைமக்களைக் கூறி அதன் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக்குரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) அடியோர் பாங்கினும் வினைவலர் பாங்கினும் - அடித்தொழில செய்வார் பக்கத்தினும் வினை செய்வார் பக்கத்தினும், கடிவரைஇல கடிந்து நீக்கும் நிலைமையில்லை, புறத்து என்மனார் புலவர் - ஐந்திணைப் புறத்தவாகிய கைக்கிளை பெருந்திணைக் கண் என்று சொல்வர் புலவர். |
‘புணர்தல் முதலான பொருள்’ என்பது அதிகாரத்தான் வந்தது. ‘வினை செய்வார்’ என்பதனால் அடியரல்லாதார் என்பது கொள்க. அகத்திணைக்கு உரியரல்லரோ வெனின், அகத்திணையாவன அறத்தின் வழாமலும் பொருளின் வழாமலும் இன்பத்தின் வழாமலும் இயலல் வேண்டும்; அவையெல்லாம் பிறர்க்கு குற்றேவல் செய்வார்க்குச் செய்தல் அரிதாகலானும், அவர் நாணுக்குறைபாடுடைய ராகலானும், குறிப்பறியாது வேட்கை வழியே சாரக் கருதுவராகலானும், இன்பம் இனிது |
|
1. வினைவல பாங்கினும் - நச். பாடம். |