தொழில்களைச் செய்வார் பக்கத்தும் இதுகாறும் கூறிவந்த முதல்கரு உரிப்பொருள்களும் கிளவித் தலைமக்கள் பெயரும் அகன்ஐந் திணைக்குப் புறத்தேயாம் என நீக்கப்படா; அகன்ஐந்திணைக்கு உரியவாகக்கொள்ளப்படும்”. |
என்பது இச்சூத்திரப் பொருள் எனவே நான்கு நிலத்தும் வாழும் மக்கள் யாவரும் அகன்ஐந்திணைக்கும் உரியர் என்பதாம், அடுத்த சூத்திரமும் இதுபோல்வதே. |
பாரதியார் கருத்து முற்றும் பொருந்தும். |
26. | ஏவல் மரபின் ஏனோரும் உரியர் ஆகிய நிலைமை யாவரும் அன்னர் | (26) |
|
ஆ. மொ. இல. |
Others who are in the position of commanding others are in a similar state. |
இளம்பூரணர் |
26. ஏவல் மரபின்..................அன்னர் |
இதுவும், கைக்கிளை பெருந்திணைக்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) ஏவல் மரபின் ஏனோரும் உரியர் - ஏவுதல்1 மரபையுடைய ஏனையோரும்2 உரியர்3; அவரும் ஆகிய நிலைமை அன்னர்-அவரும் உரியராகிய நிலையை அத்தன்மையராகலான் |
அவருமாகிய நிலைமை என மொழி மாற்றுக. கைக்கிளை பெருந்திணை என்பது அதிகாரத்தான் வந்தது. இதனாற் சொல்லியது. தலை மக்களும் கைக்கிளை பெருந்திணைக்கு |
|
1. ஏவுதல் அடியோரையும் வினைவலரையும் ஏவிக்கொள்ளுதல். |
2. ஏனையோர் - தலைமக்கள் |
3. உரியர் - கைக்கிளை பெருந்திணைகளுக்கு உரியர். |