இனி, பிறரேவல் புரியும் ஏவன் மரபினரும் அகத்துறைத் தலைவராதற்குரிய ரென்பதற்குச் செய்யுள்: |
“இகல்வேந்தன் சேனை இறுத்த வாய்போல” (கலி-108) என்பதில் “அளைமாறிப் பெயர்தருவா யறிதியோ? என்றானுக்கு” |
புனத்துளான் எந்தைக்குப் புகாவுய்த்துக் கொடுப்பதோ? |
இனத்துளான் என்னைக்குக் கலத்தொடு செல்வதோ? |
தினைத்தாளுன் யாய்விட்ட கன்றுமேய்க் கிற்பதோ? |
எனத் தலைவி கூறுவதால், இது பிறர் ஏவல் புரிவோர் அகத்துறையிற் காதற்றலைமக்க ளாதற்குரிமை கூறுதலுணர்க. |
சிவலிங்கனார் |
இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியரின் வலிந்த உரையும் பொருந்தா. பாரதியார் உரையே சாலும். |
27. | ஓதல் பகையே தூது இவை பிரிவே | (27) |
|
ஆ. மொ. இல. |
Having higher education fighting the enemy and serving as an ambassador are the causes for separation (from wife) |
பி.இ.நூ. |
இறை 35, முத்து கற்.3. |
ஓதல் காவல் பகைதணி வினையே வேந்தர்க் குற்றுழி பொருட்பிணி பரத்தையென்று ஆங்க ஆறே அவ்வயிற் பிரிவே. |
நம்பி. 62 |
பரத்தையிற் பிரிதல் ஓதற்குப் படர்தல் அருட்டகு காவலொடு தூதிற்கு அகறல் உதவிக்கு ஏகல் நிதியிற்கு இகத்தல் என்று உரைபெறு கற்பிற் பிரிவுஅறு வகைத்தே |
இல.வி.அ.58 - - |
மாறன் அகப்பொருள் 98 |