பொருள்:- ஓதல் பகையே தூது இவை = கல்வி கற்றலும், பகை கடியப் பொருதலும், தம்முள் பகைத்த பிறரைப் பொருத்தற்பொருட்டு வாயிலாகச் செல்லுதல் ஆகிய இவை; பிரிவே = பிரிதற்கு நிமித்தமாய்ப் பாலைத் திணையாகும். |
குறிப்பு:- இதில் ஏகாரமிரண்டும் அசை ஓதற் பிரிவாவது பிறாண்டு தான் ஓதற்குரிய கல்விக்குப் பிரிதல் பகைவயிற் பிரிதலாவது தன்னாட்டிற்கும் தன்னரசற்கும் பகையாவாரோடு போர் கருதிப் பிரிதல், தூதிற் பிரிதலாவது பகைத்தார் வேறிருவரைப் பொருத்தற் பொருட்டுப் பிரிதல். |
28. | அவற்றுள் ஓதலும் தூதும் உயர்ந்தோர் மேன. | (28) |
|
ஆ. மொ. இல. |
Amont them higher education and Ambassadorship are concerned with eminent people (higher intelligentia) |
பி.இ.நூ. |
இறை 36 |
அவற்றுள் ஓதலுந் தூதும் உயர்ந்தோர்க்குரிய. |
நம்பி. 69 |
ஓதல் தொழில்உரித்து உயர்ந்தோர் மூவர்க்கும். |
இல. வி. அ. 65 - - |
நம்பி 75 |
வேத மாந்தர் வேந்தர்என் றிருவர்க்கும் தூது போதல் தொழில்உரித் தாகும். |
இல.வி.அக.43, 44 |
மறையோர் மன்னர் வணிகர்வே ளாளருள் ஓதல் தொழில் உரித்து உயர்ந்தோர் மேன. எல்லார்க்கும் உரியன இவையல பிறவே. |