ஏனையரினும் உயர்ந்தோ ரென்றார்’ என்பர் இளம்பூரணர். ஒழுக்கம் குணம் செல்வங்களால் வணிகர் மற்றைய இருபிறப்பாளர்க்குக் குறைந்தவர் என்பதுண்மையன்றாகலானும், செல்வத்தால் வணிகர் ஏனையரினும் தாமே உணர்வுடையராதலானும், வணிகரும் நானிலத்தமிழரும் ஒதற்குரியரேயாதலானும் இதுவும் சூத்திரக் கருத்தாகாமை பெறப்படும். |
29. | தானே சேறலும் தன்னொடு சிவணி1 ஏனோர் சேறலும் வேந்தன் மேற்றே | (29) |
|
ஆ.மொ.இல. |
going himself or others (associated) with him going on his behalf for fighting the enemy is a privilage of the king. |
நம்பி 77, இல அக 445 |
உதவி அந்தணர் ஒழிந்தோர்க்குரித்தே. |
இளம்பூரணர் |
29. தானே சேறலும்........................மேற்றே |
இது, பகைவயிற் பிரிதற்குரிய தலைமக்களை உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) தானே சேறலும் - தானே சேறலும், தன்னொடு சிவணி ஏனோர் சேறலும் - அவனொடு கூடி ஒழிந்தோர்: சேறலும், வேந்தன் மேற்று - வேந்தன் கண்ணது. |
பகையென்றது மேனின்ற அதிகாரத்தான் உய்த்துணர்ந்து கொள்ளக் கிடந்தது. ‘தானே’ என்பதன் ஏகாரம் பிரிநிலை; படையை யொழிய என்றவாறு. போரைக் குறித்துப்பிரித்ததும் அரசர்க்கு உரித்தென்று கொள்க. இதனுள் அரசன் தலை மகனாயுழிப் பகைதணிவினைப் பிரிவு எனவும், அவனொடு |
1. சிவணிய-நச். பாடம் |