2. திசைதிசை தேனார்க்குந் திருமருத முன்றுறை வசைதீர்ந்த வென்னலம் வாடுவ தருளுவார் நசைகொண்டு தந்நிழல் சேர்ந்தாரைத் தாங்கித்த மிசைபரந் துலகேத்த வேதினாட் டுறைபவர். |
3. அறல்சாஅய் பொழுதோடெம் மணிநுதல் வேறாகித் திறல்சான்ற பெருவனப் பிழைப்பதை யருளுவார் ஊறஞ்சி நிழல்சேர்ந்தார்க் குலையாது காத்தோம்பி யாறின்றிப் பொருள்வெஃகி யகன்நாட் டுறைபவர்” |
(கலி-26) |
II. அவர் பொருள் வயிற்பிரிதற்குதாரணம்: |
“அஞ்சுரக் கவலை நீந்தி என்றும் இல்லோரக்கு இல்லென் றியைவது காத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப, நம்மினும் பொருளே, காதலர் காதல்; இருளே காதலர் என்றி, நீயே.” |
(அகம்-53) |
சீத்தலைச் சாத்தனார். |
“வெயில்வீற் றிருந்த வெம்மலை யருஞ்சுரம் ஏகுவ ரென்ப தாமே தம்வயின் இரந்தோர் மாற்றல் ஆற்றா இல்லின் வாழ்க்கை வல்லா தோரே” |
(நற்றிணை 84) |
சிவலிங்கனார் |
இச்சூத்திரம் காவற்பிரியும் பொருட்பிரிவும் உண்டு என்கின்றதேயன்றியார்க்கு உரிய என்று கூறவில்லை. அது அடுத்த சூத்திரத்துக் கூறப்படும். |
31. | மேலோர் முறைமை நால்வர்க்கும் உரித்தே | (31) |
|
ஆ.மொ.இல. |
The order of the exalted belongs to all the people of four regions. |