மேலோர் என்பதை மேல் ஓர் எனப்பிரிக்கா மேற் சூத்திரத்துக் குறிக்கப்பட்ட முறைமைகளுள் ஒன்றாகிய பொருள் வயிற்பிரிவு முறைமை இதில் மேலோர் முறைமை எனப்பட்டது. மேலே சொல்லப்பட்டன அறவழி நிறுத்தும் காவற்பிரிவும் பொருள் வயிற்பிரிவும் ஆம் |
தேவர் உருவ வழிபாடும் நானில மக்கள் அறநெறிப்படும் பிழைப்பின் பிழையாமற்காத்தல் என்பது பெரும்பாலும் அரசர்க்கே யுரியதாகும். அறநெறிகூறலால் அந்தணர்க்கும் உரியதாகும். மேற்சூத்திரத்தில் காவற்பிரிவும் பொருட்பிரிவும் கூறப்பட்டனவேயன்றி அவற்றுக்கு உரியார் யாவர் எனக்கூறப்படவில்லை அதனால் இச்சூத்திரத்தில் பொருள்வயிற்பிரிவு நால்வர்க்கும் உரித்து என்று கூறி ஏனைப்பிரிவாகிய காவற்பிரிவு அந்தணர் அரசர்க்கு உரித்து என்பது பெறவைத்தார். அடுத்து வரும் சூத்திரத்தில் காவற்பிரிவுக்குரியார் கூறுவார். |
32. | மன்னர் பாங்கிற் பின்னோர் ஆகுப. | (32) |
|
ஆ.மொ.இல. |
All must follow the king in discharging the duties of the state |
பி.இ.நூ. |
நம்பி 76. இல. அக. 454, தொன் 187 |
சிறப்புப் பெயர்பெறின் செப்பிய இரண்டும் உறற்குரி மரபின ஒழிந்தோர் இருவர்க்கும். |
முத்து. அக.50 |
பெருமா னாற்சிறப்புப் பெயர் பெறினே ஒழிந்தோர் இருவர்க்கும் உரிய ஆகும். |
இளம்பூரணர் |
32. மன்னர்... ... ... ... ஆகுப. |
இது, காவற் பகுதியாகிய முறை செய்வித்தற்கு உரிய மக்களை உணர்த்துதல் நுதலிற்று. |