பக்கம் எண் :
தொடக்கம்
244தொல்காப்பியம் - உரைவளம்

சிறந்தார்க்குரித்தென     28ஆம்   சூத்திரமும்,  அக்காவற்  பிரிவு  நானில  மேன் மக்களுக்கு முரித்தென
29ஆம்  சூத்திரமும்  மொழிந்தன.  இனி,     மன்னரொடு சிவணிச் சிறந்த மேலோர் மன்னர் பொருட்டுப்
பகைமேற்கொண்டு  பிரிதல்  மேல் 27ஆம்   சூத்திரத்திலும், காவலும் பொருளும் பற்றிப் பிரிதல்  28ஆம்
சூத்திரத்திலும்   கூறப்பெற்றனவாதலின்,   அம்மூன்று     மொழியத்தூது    முதலிய   பிறவுயர்ந்தோர்
வினைபற்றிய   பிரிவனைத்தும்   மன்னர்   பாங்ற்      பின்னோராய  அன்னவர்க்குரித்தாம்  என்பதை
இவ்வொழிபுச்  சூத்திரத்தில்  இந்நூலார்  கூறினார். “அன்பு   அறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்
பார்க்கின்றியமையாத    மூன்று”   என்பது   வாய்மொழி.    அதனால்,   மதிநுட்பம்    நூலோருடைய
உயர்ந்தோர்க்கன்றி மற்றையோர்க்குத் தூது போல்வன கூடாமை ஈண்டு விளக்கப்பட்டது.
  

இவ்வாறன்றி,     இதனை இரண்டு சூத்திரமாகப் பிரித்து     பிறவுரையாசிரியர்கள் கூறும் பொருள்கள்
இந்நூலாரைக்  கூறியது கூறும்குற்றத்திற் காட்படுத்தும். ‘மன்னர்   பாங்கிற் பின்னோராகுப’  எனத் தனியே
பிரித்து.  அதற்குப் பிறர் கூறும் உரை மேலே 27, 28, 29 ஆம் சூத்திரங்களில்   இந்நூலார்  கூறியவற்றுள்
அடங்குதலின்,   அஃதவர்   கருத்தன்மை   யறிக.  அதுவேபோல்,    ‘உயர்ந்தோர்க்குரிய.   ஓத்தினான’
என்பதைத்  தனிச்  சூத்திரமாக்கிப்  பிறர்  கூறும்  பொருள்,  முன்’     ஓதலுந் தூது முயர்ந்தோர் மேன’
என்னும்   சூத்திரங்   கூறுவதிலடங்குமாதலின்,   அதுவும்  அமைவதன்று.   ஏடெழுதுவோரால்   இவை
பிரித்தெழுதப்  பெற்று  அதனால்  பின்  உரையாசிரியர்கள்  தனிவேறு    சூத்திரங்களாகக் கருதி மயங்கி
இந்நூலாசிரியரின்  முன்  சூத்திரப் பொருளொடு பொருந்தாவாறு மாறுபடவுரை   கூறியுள்ளார்.  அன்றியும்
இரண்டாய்ப் பிரிப்பின் இரண்டும் பொருள் முடிபின்றிப் பொலிலிழக்கும்.
  

33.  

உயர்ந்தோர்க்கு உரிய ஓத்தின் ஆன.(33)
 

ஆ.மொ.இல.
  

Research studies belong to the people eminence.
  

இளம்பூரணர்:
  

உயர்ந்தோர்க் குரிய ஓத்தினான  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்