அடியோரும் வினைவலரும் ஏனோரும் தமக்கென ஒரு நெறியுடையரன்றி உயர்ந்தோர்வழி யொழுகுவர் ஆதலின் தம் விருப்பப்படி ஒழுகல் இயலாது இச்சூத்திரம் பிரிவு பற்றியதன்று. |
34. | வேந்துவினை யியற்கை வேந்தன்1 ஒரீஇய ஏனோர் மருங்கினும் எய்துஇடன் உடைத்தே | (34) |
|
ஆ.மொ.இல. |
Even those other than the thing may do the duties of the king. |
பி.இ.நூ. |
இறை 37, 38 |
வேந்துவினை யியற்கை பார்ப்பார்க்கும் உரித்தே அரசர் அல்லா ஏனை யோர்க்கும் புரைவ தென்ப ஓரிடத் தான. |
இளம்பூரணர் |
34. வேந்துவினை.................உடைத்தே. |
இது, வணிகர்க்கும் உரியதொரு பிரிவு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) வேந்துவினை இயற்கை-வேந்தனது வினை இயற்கையாகிய தூது, வேந்தன் ஓரீஇய ஏனோர் மருங்கினும் வேந்தனை ஒழிந்த வணிகர்க்கும் வேளாளர்க்கும், எய்து இடன் உடைத்து - ஆகுமிடன் உடைத்து. |
வேந்தனது வினை - வேந்தற்குரிய வினை ‘இடனுடைத்து’ என்றதனான் அவர் தூதாங்காலம் அமைச்சராகிய வழியே நிகழும் என்று கொள்க. (ஏகாரம் ஈற்றசை) (34) |
1. வேந்தனின்-நச். பாடம். |