பக்கம் எண் :
தொடக்கம்
248தொல்காப்பியம் - உரைவளம்

பாரதியார்
  

34. வேந்துவினை..............................உடைத்தே
  

கருத்து:- இது, முடியுடை வேந்தரல்லாத குறுநில மன்னர்க்குப் பிரிவுவகை கூறுகின்றது.
  

பொருள்:-  வேந்துவினையியற்கை-   முடிமன்னரின்     பிரிவுக்குரிய    வினைபியல்பு:   வேந்தனின்
ஒரீஇய-அவ்வேந்தரின்  வேறாய;  ஏனோர்  மருங்கினும்-பிறவேளிர்    முதலான  குறுநில மன்னரிடத்தும்;
எய்திடனுடைத்தே-பொருந்துதல் உரித்தாகும்.
  

குறிப்பு:- ஈற்றேகாரம் அசை.
  

குறுநில மன்னர் பிறநாடு கொள்ளப் போர்மேற் செல்லும் பிரிவுக்குப் பாட்டு:
  

“விலங்கிருஞ் சிமையக் குன்றத் தும்பர்
வேறுபல மொழிய தேஎம் முன்னி
விண்நசைஇப் பரிக்கும் உரன்மலி நெஞ்சமொடு
புணமாண் எஃகம் வலவயி னேந்திச்
செலமாண் புற்றநும் வயின்வல்லே
வலனா கென்றலும் நன்றுமற் றில்ல
இறங்கு குடிக்குன்ற நாடன்

  (அகம்-215)
 

இவ்வாறே மற்றைப் பிரிவுகளும் வந்துழிக்கண்டு கொள்க.
  

35.  

பொருள் வயிற் பிரிதலும் அவர்வயின் உரித்தே1  (35)
 

36. 

உயர்ந்தோர் பொருள்வயின் ஒழுக்கத்தான்2(36)
 

ஆ.மொ.இல.
  

(முன் சூத்திரத்தையும் இணைத்துக் காண்க)
  

Separation for earning wealth belongs to them if they
are after the wealth of the superior order.
 
  

பி.இ.நூ.
  

இறை 39
  

வேந்தர்க் குற்றுழிப் பொருட்பிணிப் பிரிவு என்று ஆங்க இரண்டும் இழிந்தோர்க்குரிய.
  


1,2 இவ்விரு சூத்திரங்களையும் ஒரு சூத்திரமாகக்கொள்வர் நச்சினார்க்கினியரும் பாரதியாரும்.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்