பக்கம் எண் :
தொடக்கம்
252தொல்காப்பியம் - உரைவளம்

37.  

முந்நீர் வழக்கம் மகடூஉவொடு இல்லை.(37)
 

ஆ.மொ.இல.
  

Voyage is not undertaken with the wife
  

பி. இ. நூ.
  

நம்பி. 84, 85
  

புலத்திற் சிறந்த புரிநூல் முதல்வர்க்குக்
கலத்திற் சேறல் கடனன் றென்ப
வலனுயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும்
குலமட மாதரொடு கலமிசைச் சேறலும்
பாசறைச் சேறலும் பழுதென மொழிப
  

இல.வி.அ.80,81
  

புலத்திற் சிறந்த புரிநூல் முதல்வர்க்குக்
கலத்திற் சேறல் கடனன் றென்ப
வலனுயர் சிறப்பின் மற்றை மூவர்க்கும்
குலமட மாதரொடு கலமிசைச் சேறலும்
பாசறைச் சேறலும் பழுதென மொழிப
 

இளம்பூரணர்
  

37. முந்நீர் வழக்கம்.......................இல்லை
  

இதுவும், பொருள்வயிற் பிரிவதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  முந்நீர்  வழக்கம்  மகடூஉவோடு  இல்லை  -  (ஈண்டு அதிகரிக்கப்பட்ட பிரிவு காலிற் பிரிவும்
கலத்திற் பிரிவும் என இருவகைப்படும் : அவற்றுள்) கலத்திற் பிரிவு தலைமகளுடன் இல்லை.
  

எனவே, காலிற்பிரிவு தலைமகளை  உடன்கொண்டு  பிரியவும் பெறும் என்றவாறாம். கலத்திற் பிரிவு,
  

தலைமகளை ஒழியப் பிரிந்தமைக்குச் செய்யுள்.
  

“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்
புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ
இரவும் எல்லையும் அசைவின் றாகி
விரைசெலல் இயற்கை வங்கூழ் ஆட்டக்
  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்