பக்கம் எண் :
தொடக்கம்
தன்னும் அவனும் அவளும் சூ.39261

தலைவிக்குரியதாக     இல்லை.   அதனால் ஒருவரை ஒருவர் கூடப்பெறாத காரணத்தால்  பிரிவு போலும்
உணர்ச்சியுடையராக   இருத்தலின்    பிரிவு  பற்றிக்  கூறிவந்து  இறுதியில்  இச்சூத்திரத்தை   வைத்தார்
ஆசிரியர் என்க.
  

அகன்  ஐந்திணைக்  களவில்  தலைவன் மடல் ஏறுதலும்  உண்மையில் தலைவிக்கும் உண்டோ எனின்
எத்திணையிலும் இல்லை என்பது கூற வேண்டுவதாயிற்று.
  

கைக்கிளை   இலக்கணமோ   பெருந்திணையிலக்கணமோ   கூற  வந்ததன்று  இச்சூத்திரம்  ஆதலின்
உரையாளர் இருவர் கூற்றும் ஏற்பதற்கில்லை.
  

39.

தன்னும் அவனும் அவளும்1 சுட்டி
மன்னு நிமித்தம் மொழிப்பொருள் தெய்வம்
நன்மை தீமை அச்சம் சார்தல் என்று
அன்ன பிறவும் அவற்றொடு தொகைஇ
முன்னிய காலம் மூன்றுடன் விளக்கி
தோழி தேஎத்தும் கண்டோர் பாங்கினும்
போகிய திறத்து நற்றாய் புலம்பலும்
ஆகிய கிளவியும் அவ்வழி உரிய  
(39)
 

ஆ. மொ. இல.
  

The themes fit for literature are, the mother expressing her concern and love about the
lover  and  daughter  because  of  omen,  the  sayings  of greatmen God, good or bad
happenings, her fear, their destination and such other developments which may arise after
the elopment of her daughter with the lover, explaining the occurrence in past, Present and
future seeing the sorrowful state of mind of attendents and of those who went in search
of her, the lamentations of mother and such other actions which exhibit her sorrowful state.
 
  


1. அவளும் அவனும் - பாடம்.  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்