பக்கம் எண் :
தொடக்கம்
284தொல்காப்பியம் - உரைவளம்

இனி, செவிலி தேடிச் செல்லுதற்குச் செய்யுள்:
  

“காலே பரிதப் பினவே கண்ணே
நோக்கி நோக்கி வாளிழந் தனவே,
அகலிரு விசும்பின் மீனினும்
பலரே மன்றஇவ் வுலகத்துப் பிறரே.”   

   (குறுந் 44)
 

பாலைக்கலியில், “எறித்தரு கதிர்தாங்கி” எனும் பாட்டில்.
  

“வெவ்விடைச்  செலல்மாலை ஒழுக்கத்தீர்! இவ்விடை   என் மகள் ஒருத்தியும் பிறண் மகன் ஒருவனும்,
தம்முளே   புணர்ந்த  தாமறி  புணர்ச்சியர்;  அன்னார்     இருவரைக்  காணீரோ  பெரும”  எனுமடிகள்
சுரஞ்சென்ற செவிலியின் கூற்றாம்.
  

41.  

அயலோ ராயினும் அகற்சி மேற்றே (41)
 

ஆ. மொ. இல.
  

Even if they are in a place very near, it is to be
considered as separation.
  

இளம்பூரணர்
  

41. அயலோர்...............................மேற்றே.
  

இதுவும், பாலைக்கு உரியதோர் இயல்பு உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)   அயலோராயினும்   -   (சேரியினும்   சுரத்தினும்   பிரிதலன்றித்)   தமது   மனையயற்கண்
பிரிந்தாராயினும், அகற்சி மேற்றே - பிரிவின் கண்ணதே.
  

எனவே,   ஓர்   ஊரகத்து   மனையயற்கண்ணும்   பரத்தையிற்   பிரிவு   பாலையாம்   என்பதூஉம்
உய்த்துணர்ந்து கொள்ளப்படும்.                                                           (41)
  

நச்சினார்க்கினியர்
  

41. அயலோர்........................மேற்றே
  

இதுவும் பாலைக்கு ஓர் வேறுபாடு கூறுகின்றது.
  

(இ-ள்) அயலோர் ஆயினும் - முற்கூறிய சேரியினுஞ்  

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்