பக்கம் எண் :
தொடக்கம்
அகத்திணையியல் சூ.329

3.

முதல்கரு உரிப்பொருள் என்ற மூன்றே
நுவலுங் காலை முறைசிறந்தனவே
பாடலுள் பயின்றவை நாடுங்காலை
(3)
 

ஆ. மொ. இல.
  

On examining the content of poetry, it is found, ‘Muthal’, ‘Karu’ and ‘Uri’ are the
three which excel in order in the act of composing

  

நம்பி - 7
  

அவைதாம்
  

முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் எனமுறை
நுதற்பொருள் மூன்றினும் நுவலப் படுமே.

  

இல. வி. 8. நம்பி. சூத்திரமே.
  

முத்து. அக. 6
  

முதல்கரு உரிப்பொருள் மூன்றா கும்மே.
  

இளம்பூரணர்
  

3. முதல்கரு.................. காலை
  

இது  மேற்சொல்லப்பட்ட  நடுவண்  ஐந்திணை ஆமாறும் ஒரு வகையான் உலகத்துப் பொருள் எல்லாம்
மூவகையாகி அடங்கும் என்பதூஉம் உணர்த்துதல் நுதலிற்று.
  

(இ-ள்)  பாடலுள்  பயின்றவை  நாடும்   காலை  -  சான்றோர்  செய்யுளகத்துப்  பயின்ற  பொருளை
ஆராயுங்கால், முதல் கரு உரிப்பொருள் என்ற  மூன்றே - முதற்பொருள்  எனவும்  கருப்பொருள்  எனவும்
உரிப்பொருள்  எனவும்  சொல்லப்பட்ட  மூன்று  பொருண்மையுமே  (காணப்படும்),  நுவலுங்காலை  முறை
சிறந்தன - அவை சொல்லுங்காலத்து முறைமையாற் சிறந்தன.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்