ஒன்றாத் தமரினும் பருவத்தும் சுரத்தும் ஒன்றிய மொழியொடு வலிப்பினும் விடுப்பினும் இடைச்சுர மருங்கின் அவள்தமர் எய்திக் கடைக்கொண்டு பெயர்தலின் கலங்கு அஞர் எய்திக் கற்பொடு புணர்ந்த கௌவை யுளப்பட அப்பாற்பட்ட ஒருதிறத் தானும் நாளது இன்மையும் இளமையது அருமையும் தாளாண் பக்கமும் தகுதியது அமைதியும் இன்மையது இளிவும் உடைமையது உயர்ச்சியும் அன்பினது அகலமும் அகற்சியது அருமையும் ஒன்றாப் பொருள்வயின் ஊக்கிய பாலினும் வாயினும் கையினும் வகுத்த பக்கமொடு ஊதியம் கருதிய ஓருதிறத்தானும் புகழும் மானமும் எடுத்துவற் புறுத்தலும் தூது இடையிட்ட வகையி னானும் ஆகித் தோன்றும் பாங்கோர் பாங்கினும் மூன்றன் பகுதியும் மண்டிலத்து அருமையும் தோன்றல் சான்ற மாற்றோர் மேன்மையும் பாசறைப் புலம்பலும் முடிந்த காலத்துப் பாகனொடு விரும்பிய வினைத்திற வகையினும் |