எனவும் தலைவன் தலைவியிடம் இரந்தும் தெளித்தும் கூறுதலும், |
இனித் தேற்றேம்யாம் |
“தேர்மயங்கி வந்த தெரிகோதை அந்நல்லார் தார்மயங்கி வந்த தவறஞ்சிப் போர்மயங்க நீகூறும் பொய்ச்சூள் அணங்காயின் மற்றினி யார்மேல் விளியுமோ கூறு.” |
(கலி-88) |
எனக் கூறித் தலைவி ஊடல் தணிதலும் வந்தமை காண்க. |
“நில்லாங்கு நில்லாங்கு” என்னும் மருதக்கலியுள் |
“ஆயிம் ஆயிழாய் அன்னவை யானாங் கறியாமை போற்றிய நினைத் தொடுகு.” |
(கலி-95) |
எனத் தன் பரத்தமைக்குப் புலந்த தலைவியைத் தெளிக்கு முகத்தானும், |
“நல்லாய்! பொய்யெல்லாம் ஏற்றித் தவறு தலைப்பெய்து கையொடு கண்டாய், பிழைத்தே னருளினி.” |
(மருதக்கலி-95) |
என இரக்கு முகத்தானும், தலைவன் கூற்று நிகழ்த்தியது காண்க. |
45. | எஞ்சி யோர்க்கும் எஞ்சுதல் இலவே. | (45) |
|
ஆ. மொ. இல. |
The act of expression is not prohibited to others also who are not specifically mentioned here. |
இளம்பூரணர் |
45. “எஞ்சி யோர்க்கு மெஞ்சுதல் இலவே” |
இது காறும் பிரிவின் கண் கூறுதலுரியார் பலருள்ளும் நற்றாயும் செவிலியும் கண்டோரும் தோழியும் தலைமகனும் கூறுங்கூற்றுக் கூறினார். இஃது அவரை யொழிந்த தலை |