எல்லிவிட் டன்று வேந்தெனச் சொல்லுபு பரியல்; வாழ்கநின் கண்ணி; காண்வர விரியுளைப் பொலிந்த வீங்குசெலற் கலிமா வண்பரி தயங்க வெழீ இத்தண் பெயற் கான்யாற் றிடுமணற் கரைபிற் கொழிய வெல் விருந் தயரு மனைவி மெல்லிறைப் பணைத்தோட் டுயிலமர் போயே” |
பாணன் கூற்றிற்குப் பாட்டு வருமாறு: |
“நினக்கியாம் பாணரு மல்லே மெமக்கு நீயும் குருசிலை யல்லை மாதோ; நின்வெங் காதலி தன்மனைப் புலம்பி ஈரித ழுண்கண் உகுத்த பூசல் கேட்டு மருளா தோயே.” |
(ஐங்-480) |
கீழ்வரும் அயலோர் கூற்று ‘ஊரும் அயலும்’ என்னும் செய்யுளில் (503) சூத்திரத்திற்கு மாறான பிற்கால வழக்காகும்.8 |
“துறந்ததற் கொண்டு துயரடச் சாஅ யறம்புலந்து பழிக்கு மளைக ணாட்டி! எவ்வ நெஞ்சிற் கேம மாக வந்தன ளோநின் மகளே, வெந்திறல் வெள்வேல் விடலை முந்துறவே.” |
(ஐங்-393) |
இது, உடன்போய்த் தலைமகள் மீண்டுவந்துழி அயலோர் அவள் தாய்க்குச் சொல்லியது. |
|
46. | நிகழ்ந்தது நினைத்தற்கு ஏதுவும் ஆகும் | (46) |
ஆ.மொ.இல. |
What happened once may be thought of again |
இளம்பூரணர் |
46. நிகழ்ந்தது......................ஏதும் ஆகும். |
இதுவும் பாலைக்கு உரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று |
8 ஊரவரும் அயலவரும் கூறுவன அவராலேயே நேரே கூறப் பட்டனவாகச் செய்யுளில்வாரா பிறர் கொண்டு கூறுவனவாகவே வரும் என்பது அச்சூத்திரப் பொருள். கீழ்வரும் செய்யுள் அயலோர் நேர் கூற்றாகவருவது தொல்காப்பியர்க்குப் பிற்கால வழக்கு. |