தலைவன் தன் கண்ணே நிகழ்ந்த நிகழ்ச்சியை நினைதற்கு உதாரணம். “வேர் பிணிவெதிர” (நற்-62) என்பது. தலைவி தன் கண் நிகழ்ந்த நிகழ்ச்சிக்கு உதாரணம் வந்தவழிக்காண்க. “யாருமில்லை தானே கள்வன்” (குறுந்) என்பது காட்டுதல் சிறப்பின்று; தலைவன் தன்கண் செய்த செயலாக அது அமைதலின். |
தலைவி கண் நிகழ்ந்ததைத் தலைவன் நினைத்தற்குச் செய்யுள் “அளி நிலை பெறாக தமரியமுகத்தள்” (அகம்-5) என்பது. தலைவன் கண் நிகழ்ந்ததை அதாவது தலைவன் தன்னிடம் நிகழ்த்தியதை நினைத்தற்குச் செய்யுள் “நுண்ணெழில் மாமை.............அறியேன் என்னும்” (கலி-4) என்பது. |
‘நினைத்தற்கு ஏதுவும் ஆகும்’ என்பதை நினைத்தற்கும் ஏதுவாம் என உம்மையைப் பிரித்துக்கூட்டுக. உம்மையால் நினையாமையும் கொள்ளலாம். ஆதலின் அது எதிர்மறை. நினைத்தலேயன்றிக் கூறுதற்கும் ஆம் எனக்கொள்ளும் நச்சினார்க்கினியர் கூற்றின்படி எச்சவும்மையாகவும் கொள்ளலாம். |
47. | நிகழ்ந்தது கூறி நிலையலும் திணையே | (47) |
ஆ.மொ.இல. |
Expression of what once happened also forms the theme of literature on aspects of love. |
இளம்பூரணர் |
47. நிகழ்ந்தது...........திணையே. |
இதுவும் அது. |
(இ-ள்) நிகழ்ந்தது கூறி நிலையலும் திணை-முன்பு நிகழ்ந்ததனைக் கூறிப்போகா தொழிதலும் பாலைத்திணையாம். |
“ஈன்பருந் துயவும் வான்பொரு நெடுஞ்சிணைப் பொரியரை வேம்பின் புற்றி நீழற் கட்டளை யன்ன வட்டரங் கிழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட் டாடும் |