எல்லாத்திணைக்கும் இச்சூத்திரம் பொதுவாகாது. எல்லாத் திணையிலும் பிரிவு உண்டு. எனினும் குறிப்பிட்டு ஒரு திணையிற் சார்த்த வேண்டுமாயின் பாவையிலேயே சார்த்தப்படும். |
48. | மரபு நிலை திரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் விரவும் என்ப. | (48) |
|
ஆ.மொ.இல. |
Without violating the traditional way of making literature new additions may form the themes of expression |
இளம்பூரணர் |
48. “மரபுநிலை திரியா....................என்ப” |
இதுவும் அது. |
(இ-ள்) மரபு நிலை திரியா மாட்சிய ஆகி விரவும் பொருளும் விரவும் என்ப மரபு-நிலை திரியாத மாட்சிமை யுடையவாகி விரவும் பொருளும் விரவும் என்ப. |
அஃதாவது பாலைக்கு ஓதிய பாசறைப் புலம்பற்கண்ணும் தேர்ப்பாகற்குக் கூறுதற்கண்ணும், முல்லைக்குரிய முதற்பொருளும் கருப்பொருளும் விரவுதலாம். 1இந்நிகரான பிறவுங் கொள்க. |
மரபுநிலை திரியாமையாவது, பாசறைக்கண் வினை முடித்த வழிக் கார்காலம் வந்ததாயின் ஆண்டுக் கூறும் கூற்று. அஃது அக்காலத்தைப் பற்றி வருதலின் மரபு நிலை திரியாதாயிற்று. |
“வேந்து வினை முடித்த” என்னும் அகப்பாட்டினுள் (14) கண்டு கொள்க. |
இன்னும் ‘மாட்சிய ஆகி விரவும்’ பொருளும் விரவும் என்றதனால் பாசறைக்கண் தூது கண்டு கூறுதலும் தலைமகளை இடைச்சுரத்து நினைத்துக் கூறுதலுங் கொள்க. |
1 இது பொருந்தாது திணைமயக்கமாதலின் நச்சினார்க்கினியரும் பாரதியாரும் கூறுவன பொருந்தும். |