பக்கம் எண் :
தொடக்கம்
அகத்திணையியல் சூ.441

நுவலுங்காலை     என்றதனால்  இது  அகப்பொருட் செய்யுட்கே கூறப்பட்டது என்னலாம். புறப்பொருட்
செய்யுள்கள்    உரிப்பொருளடிப்படையிலேயே     திணையும்     துறையும்    வகுக்கப்படுவன.    அகப்
பொருட்செய்யுள்கள்  முதல்   கருஉரிப்பொருள்களால்  திணையும்  துறையும்  வகுக்கப்படுவன.  கால முதற்
பொருளாலும்  கருப்பொருளாலும்  திணைமயங்குதலும்  உண்டு  என்பது  அகப்பொருட்  செய்யுள்களுக்கே
உரியது.  அதனால் புறப்பொருட் செய்யுள்களுக்குத்  திணை  மயக்கம்  கூறுதல்  இல்லை.  மேலும் குறிஞ்சி
முல்லை  முதலிய  நிலப்பாகுபாடு  பெயர்சுட்டிக்   கூறப்படும்   தலைமக்களுக்கு  உரியவல்லை.  அவர்க்கு
அவர்  ஆளும்  பெருநாடே  நிலமாகும்.   யாவும்கருப்  பொருள்களாகும்.  அதனால்திணை  துறைவகுக்க
உரிப்பொருள் ஒன்றே சிறந்ததாகும். எனவே இச்சூத்திரம் அகப்பாடல்களுக்கே உரியதாகும்.
  

4.

முதல்எனப் படுவது நிலம்பொழுது இரண்டின்.
இயல்பென மொழிப இயல்புணர்ந் தோரே.
(4)
 

ஆ. மொ: இல.
  

Space and Time are said to be ‘Muthal’ by scholars who know their nature.
  

பி. இ. நூ.
  

நம்பி.8.
  

நிலமும் பொழுதும் என முதல்இரு வகைத்தே.
  

இல. வி. 9.   -  -
  

முத்து அக.7
  

முதல்நிலம் பொழுதிரு வகைப்படும் எனலே
  

இளம்பூரணர்
  

4. முதல் எனப் ................ தோரே.
  

இது   மேற்சொல்லப்பட்ட   மூன்று   வகைப்  பொருளினும்  முதற்  பொருள்  ஆமாறு  உணர்த்துதல்
நுதலிற்று.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்