குறிப்பு: ஈற்றேகாரம் அசை. ஒப்பியலறிந்தோர் என்னுமெழுவாய் கூறுவர் என்னும் வினைக்கேற்ப அவாய் நிலையாற் பெறப்பட்டது. |
51. | உள்ளுறுத்து இதனொடு ஒத்துப் பொருள் முடிகஎன உள்ளுறுத்து இறுவதை1 உள்ளுறை உவமம் | (51) |
|
ஆ. மொ. இல. |
‘Ullurai Uvamam’ is that which is understood by inference from the simile given in the text. |
பி. இ. நூ. |
நம்பி.238, இல.வி.அ.214. |
அவற்றுள் உள்ளுறை யுவமம் உய்த்துணர் வகைத்தாய்ப் புள்ளொடும் விலங்கொடும் பிறவொடும் புலப்படும். |
மாறன் அக.123 |
உணர்வதற் கரிதாம் உவமப் போலி புணர்திறம் வினையே பொருள்மெய் உருவெனப் பிறப்பொடும் ஐந்தாம் பெற்றித் தாகி சிறப்புறு திணைகளின் தெய்வதம் ஒழிந்த கருப் பொருள்களனாக் கட்டுரை பயின்று உவமையோ டெதிருள் ளுறுத்தலுற் றயலாம் உவமச் சொல்தொக ஒருதலை ஆகியும் அன்பின தளவாம் அகத்திணை இருவயின் இனபதுன் பத்திசை திரிந்து இசையாத் துணைவன் துணைவி தோழி செவிலி இணைபெறும் பாங்கன் பாணன்என் றிவரால் சொல்வகை பின்வரூஉம் குறிப்புடைத் தாகும் |
இளம்பூரணர் |
51. உள்ளுறுத்து இதனொடு.................உவமம் |
இஃது உள்ளுறை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. |
1 உரைப்பதே-இளம்-பாடம் |