கொண்டு சென்று, அவளைத் தன் மனையில் கற்பறம் சிறக்கத் காதலால் மணந்து நன்மையைத் தந்தான் என்பது உள்ளுறுத்து ஒத்து முடிவதால். இது உள்ளுறை உவமமாமாறு காண்க. |
52. | ஏனை உவமம் தான் உணர் வகைத்தே | (52) |
|
ஆ.மொ.இல. |
The other ‘Uvamam’ is easily understood. |
பி.இ.நூ. |
நம்பி. 239, இல.வி.அ.215 |
வெளிப்படை யுவமம் வினைபயன் மெய்யுரு வெளிப்பட நின்று விளங்குவ தாகும். |
இளம்பூரணர் |
52. ஏனை உவமம்....................வகைத்தே |
இஃது ஏனை உவமம் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) ஏனை உவமம்தான் உணர்வகைத்து உள்ளுறை-யொழிந்த உவமம்தான் உணரும் வகையான் வரும். |
தான் உணரும் வகையாவது, வண்ணத்தானாதல் வடிவானாதல் பயனானாதல் தொழிலானதால் உவமிக்கப்படும் பொருளொடு எடுத்துக் கூறுதல் (ஏகாரம் ஈற்றசை) |
அது வருமாறு உவமவியலுட் கூறப்படும் இதனால் திணை உணருமாறு; |
“வளமலர் ததைந்த வண்டுபடு நறும்பொழில் முளைநிரை முறுவல் ஒருத்தியொடு நெருநல் குறிநீ செய்தனை யென்ப அலரே குரவ நீள்சினை உறையும் பருவ மாக்குயிற் கௌவையிற் பெரிதே.” |
(ஐங்குறு-369) |
இஃது ஊடற் பொருண்மைத்தேனும், வேனிற்காலத்து நிகழும் குயிற்குரலை உவமித்தலிற் பாலைத் திணையாயிற்று. மரவம்-குராமரம். |