பொருள்: ஏனை உவமம் - உள்ளுறை ஒழிந்த பிறஉவமம்; தானுணர் வகைத்தே-நுணுகி உள்ளுறுத்துணர வேண்டாது. பட்டாங்கே சொல்வழிப் பொருளறியக் கிடக்கும் கூறுபாட்டையுடைத்து. |
குறிப்பு: அகத்திணைக்குச் சிறந்துரிய உள்ளுறையைக் கூறியபின், ஒப்பக்கூறல் ஒன்றென முடித்தல் தன்னின முடித்தல் என்னும்முறை பற்றி, உள்ளுறுத்துணரும் உள்ளுறை உவமம் போலாது பட்டாங்குணரும் பான்மைத்தாம் “ஏனை உவம” இயலும் உடன் கூறப்பட்டது. திணையுணர்வகையல்லாப் பிற அகப்பகுதிகளிளெல்லாம் ஏனையுவமமும் ஒத்த வழக்குரிமை கொள்ளுதலின், அதுவுமிங்கமைய விளக்கப்பட்டது. |
இனி, உருவகத்தை உள்ளுறை உவமமென மயங்கவைக்கும் நச்சினார்க்கினியர் சிறப்புரை பொருந்தாமையுமறிக. |
(48) |
சிவலிங்கனார் |
“ஏனையுவமம் என்பது உள்ளுறுத்து இதனோடு ஒத்துப் பொருள் முடிக எனப்புலவரான் கூறப்படாது படிப்போர்க்குத் தானே வெளிப்படையாக உணரும்படிப் பொருளையும் கூட்டிமுடிக்கும் தன்மையதாகும்” என இச்சூத்திரத்துக்குப் பொருள் கொள்க. |
53. | காமம் சாலா இளமையோள் வயின் ஏமம் சாலா இடும்பை எய்தி நன்மையும் தீமையும் என்றிருதிறத் தான் தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்துச் சொல்லெதிர் பெறாஅன் சொல்லி யின்புறல் புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே. | (53) |
|
ஆ.மொ.இல. |
Unreciprocated love occurs in the act of having pleasure in addressing young girl who is not matured for enjoyment, he being possessed of agoney of love, having attributing good and evil to himself to her without having any reply from her. |