பக்கம் எண் :
தொடக்கம்
424தொல்காப்பியம் - உரைவளம்

உடைமையாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்.”

(2)
 

“அல்லல்கூர்ந் தழிவுற அணங்காகி அடருநோய்
சொல்லினு மறியாதாய் நின்தவ றில்லானும்
ஒல்லையே உயிர்வவ்வும் உருவறிந் தணிந்துதம்
செல்வத்தாற் போத்தந்த நுமர்தவ றில்லென்பாய்.”

(3)
 

என     வந்தமை  காண்க.  இத்தாழிசைகளுள், (1) தலைவன் தன்னை  நலியும் காமநோயை ‘இளமையா
ணுணராதாய்  ‘மடமையா   னுணராதாய்’,  சொல்லினு  மறியாதாய்’  எனக் கூறுதலால், அவள் காமஞ் சாலா
இளமையோள்  என்பது  அறியப்படும்   (2)    ‘களைநரின் நோய்   செயும் கவின்’ எனவும், ‘இடை நில்லா
தெய்க்கு  நின்  உரு’  எனவும்,    ‘ஒல்லையே  உயிர்  வவ்வும்    உரு’ எனவும் அவளைப் புகழ்வதாலும்
இக்கலியுள்  சுரிதகத்தில்  ‘மற்றிந்  நோய்  பொறுக்கலாம்  வரைத்தன்றிப்    பெரிதாயின்,   பொலங்குழாய்
மறுத்திவ்வூர்  மன்றத்து  மடலேறி  நிறுக்குவன்  போல்வல்யான்’  ‘நீ    படுபழியே’   எனப்பழிப்பதுபோல
அவள்  பெருமை  கூறுதலாலும்   நன்மையும் தீமையும்   என்றிரு   திறத்தாலும் தன்னொடும் அவளொடும்
தலைவன்  தருக்கிய  புணர்த்துக்    கூறுதல்   காண்க. (3) இளையோள்  தனக்கு மறுமாற்றம் கூறா வழியும்.
“நுமர்தவறில்  லென்பாய்”  என  விளித்து  அவளிடம்  சொல்லெதிர் பெறாத்  தலைவன்  தானே சொல்லி
இன்புறுதல் காண்க.

(49)
 

54.

ஏறிய மடல்நிறம் இளமைதீர் திறம்
தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே.

(54)
 

ஆ. மொ. இல.
  

The aspects of ‘Perunthinai’ are four which are the
act of having ridden the horse made of Palmyrastems
failing in love with the aged who last youth, the last
in excess which cannot be satisfied by methods of
violence in securing the lady-love.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்