55. | முன்னைய நான்கும் முன்னதற்கு என்ப | (55) |
|
ஆ.மொ.இல. |
It is said that the former four belong to the former |
இளம்பூரணர் |
55. முன்னைய... ... ... ...கென்ப |
இது கைக்கிளைக்குரியதொரு மரபு உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) முன்னைய நான்கும்-மேற் சொல்லப்பட்ட நான்கினும் முந்துற்ற நிலைமை நான்கும், முன்னதற்கு என்ப-முற்கூறப்பட்ட கைக்கிளையாம் என்ப.1 |
அவையாவன: ஏறா மடற்றிறம், இளமை தீராத்திறம், தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம், மிக்க காமத்தின் மாறாகாத்திறம் என்பன. |
ஏறா மடற்றிறம் வெளிப்பட இரத்தலாம் இளமை தீராத்திறம் நலம் பாராட்டலாம். தேறுதலொழிந்த காமத்து மிகாத்திறம், புணரா விரக்கமாம் மிக்க காமத்தின் மாறாகாத்திறம், நயப்புறுத்தலாம். |
இவை ஒருவாற்றான் உணர்த்தியவாறு. |
“கைக்கிளை செந்திறம் பெருந்திணை நோந்திறம் அத்திறம் இரண்டு அகத்திணை மயங்காது அத்திணை யானே யாத்தனர் புலவர்.” |
இதனானே கைக்கிளை இன்பம் பயப்ப வருமென்பதூஉம், பெருந்திணை துன்பம் பயப்ப வருமென்பதூஉம் அறிந்து கொள்க. |
1 முன்னைய என்பதற்கு முன்உள்ள நிகழ்ச்சி எனப்பொருள் கொண்டார். ஏறிய மடற்றிறத்துக்கு முன் உள்ள நிகழ்ச்சி யாவது மடலேறாது வெளிப்பட இரத்தலாம். இப்படிப் பிறவும் கொள்க. ஏறாமடற்றிறம் முதலிய நான்கும் அகன் ஐந்திணையுள் அடங்குவனவே யன்றிக் கைக்கிளையில் அடங்கா, யாவும் இயற்கைப் புணர்ச்சிப் பின் நிகழ்வன ஆதலின் என்க. |