என்ற மூன்றும் கூறலின் நாடக வழக்கும் தலைவனைத் தலைவி கொடுமை கூறல் உலகியலாகலின் உலகியல் வழக்கும் உடன் கூறிற்று. இவ்விரண்டும் கூடி வருதலே பாடலுட் பயின்ற புலனெறிவழக்கம் எனப்படும்” என்றார் முதல் கரு உரிப்பொருள்கள் பாடலுள் வருதல் வேண்டும் என்பது, செய்யுட்குரிய அமைப்பாக இலக்கண நூலார் வகுத்ததேயன்றி நாடகத்துக்கென்று அமைத்ததன்று. நாடகவழக்கு நேருக்குநேர் உரையாடல் நோக்கத்தன்றி முதல் கரு உரியெனும் முப்பொருள் நோக்கத்த அன்று. உரிப்பொருளின்றிச் செய்யுள் இல்லையாதலின் உரிப்பொருளை அவர் கூறியதும் பொருந்தாது. முதல்கரு உரிப்பொருள் என வகுத்தது செய்யுள் வழக்குக்காகவே. |
நாடக வழக்காவது ‘பொருநு’ வழக்கு என்று கூறி அதாவது ஒருவர்போல நடிப்பது என விளக்கம் கூறினார் பாரதியார். நடிப்புப்பற்றிய பேச்சுக்கு இங்கு இடம் இல்லை. நாடக வழக்கு என்பது நாடக நடைமுறை. அது உரையாடலையே குறிக்கும். நடிப்பைக் குறியாது. நடிப்புமுறை இலக்கணமாகும். ஆதலின் பாரதியார் கூற்றுப் பொருந்தாது. |
57. | மக்கள் நுதலிய அகன்ஐந் திணையும் சுட்டி ஒருவர்ப்1 பெயர்கொளப் பெறாஅர். | (57) |
|
ஆ.மொ.இல. |
In the literature of five live-aspects belonging to ‘Aham’ having people as objects the name of any particular person finds no place. |
இளம்பூரணர் |
57. மக்கள் நுதலிய..............பெறாஅர். |
இது, நடுவணைத்திணைக்குரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. |
(இ-ள்) அகன் மக்கள் நுதலிய ஐந்திணையும்-அகத்திணையுள் கைக்கிளை பெருந்திணை ஒழிந்த ஐந்திற்கும் உரியவாகிய நிலமும் காலமும் கருப்பொருளுமன்றி மக்களைப்பற்றி வரும் |
1 ஒருவர் - பாடம் |