பக்கம் எண் :
தொடக்கம்
62தொல்காப்பியம் - உரைவளம்

இனிக் கூதிரும் யாமமும் குறிஞ்சிக் காதற்குச் செய்யுள் வருமாறு:-
  

“சிறைபனி யுடைந்த சேயரி மழைக்கட்
பொறையரு நோயொடு புலம்பலைக் கலங்கிப்
பிறரும் கேட்குந ருளர்கொல்? உறைசிறந்
தூதை தூற்றுங் கூதிர் யாமத்
தானுளம் புலம்புதொ றுளம்பும்
நாநவில் கொடுமணி நல்கூர் குரலே.”
 

(குறுந்-86)
 

இதில்  கூதிரும் யாமமும் கூடுதலாகிய காலம் குறிஞ்சிக் குரித்தெனல்  காண்க. “காம மொழிவதாயினும்”
எனும்  கபிலர்  குறும்பாட்டில்  (42)  யாமமும்.  “யாது  செய்வாங்கொல் தோழி”  எனும்  நன்னாகையார்
குறும்பாட்டில் (197) கூதிரும் குறிஞ்சிக்குரித்தாதல் குறிக்கப்படுதலுமறிக.
  

8.

பனியெதிர் பருவமும் உரித்துஎன மொழிப (8)

 

ஆ. மொ. இல.
  

The dewy season also belongs to
‘Kurinji’ - say the scholars.
  

பி.இ.நூ.
  

நம்பி 13.
  

கூதிர் யாமம் முன்பனி என்றிவை
ஓதிய குறிஞ்சிக் குரிய வாகும்.
  

இல.வி.அ. 14.
  

கூதிர் யாமம் முன்பனி என்றிவை
ஓதிய குறிஞ்சிக் குரிய வாதலும்.
  

முத்து அக 14, 15
  

கூதிரும் யாமமும் குறிஞ்சிக் குரிய
பனி யெதிர் பருவமும் உரிய தாகும்.
  

இளம்பூரணர்
  

8. பனிஎதிர்..................மொழிப.
  

இஃது எய்தாதது எய்து வித்தல் நுதலிற்று.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்